பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ♦ அறிஞர் அண்ணா



தீர்மானத்தை இந்த நாட்டில் உள்ள எல்லாக் கட்சியினரும் ஆதரித்தனர் தலைவர் பி. டி. இராசன் போன்ற இந்த நாட்டை ஆண்டவர்கள் ஆதரித்தனர்; ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள காங்கிரசார் ஆதரித்தனர்; 'நாட்டை ஆளவே கூடாது' என்று சபிக்கப் பட்டிருக்கின்ற என்போன்றவர்கள் ஆதரித்தனர்--இப்படி எல்லோரும் ஒருமுகமாக ஏற்றுக் கொண்ட தீர்மானத்தை மத்திய அரசாங்கம் புறக்கணித்து விட்டது!

எனவேதான், இது போன்ற விழாக்களில் என்னைப் போன்றவர்களை அழைப்பதைக் காட்டிலும் 'மத்திய அரசாங்க அமைச்சர்களை அழைத்து வந்து காட்டுங்கள்--இங்கே குவிந்துள்ள கைத்தறித் துணிகளின் உயர்ந்த தரத்தினையும், அவைகளை நெய்யும் கைத்தறியாளர்களின் கைத்திறனையும் அவர்களுக்குப் புலப்படுத்துங்கள்--அப்படியே அந்த அமைச்சர்களைக் கைத்தறியாளர்கள் வாழும் குடிசைகளுக்கு இட்டுச் சென்று, அங்கு அவர்கள் படும் துயரங்களையும் காணச் செய்யுங்கள்--அவர்களது பசி நீங்க அமைச்சர்களிடம் வழிவகை காணுமாறு கூறுங்கள்' என்று கூறுகின்றேன்,

இங்கு பேசிய அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள், 'கைத்தறியாளருக்கு நிரந்தரமான பாதுகாப்புக் கிடைக்க மத்திய அரசாங்கம் தான் வழி செய்ய வேண்டும்; சிலரக துணிகள் நெய்வதைக் கைத்தறிக்கே ஒதுக்க வேண்டும்', என்று கூறியிருக்கிறார்.

'காய்ச்சல் விட்டால் கைகால் பிடிப்பு விடும்' என்பது போல, மத்திய அரசாங்கம் மனது வைத்தால்தான் கைத்தறி வாழும்' என்கிறார் மந்திரி சுப்பிரமணியம்.

காய்ச்சல் விடுவதற்கு செந்தூரமா--பஸ்பமா--பச்சிலையா இன்ஜெக்ஸனா--யுனானி முறையா சித்த வைத்தியமா--ஓமியோபதியா--நாட்டுமுறையா--ஆங்கில முறையா என்பதை நாம் வேறு அரசியல் மேடைகளில்