பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பகத் தருவைச் சேர்ந்த, காகமும் அமுத முண்ணும். கற்பக விருக்ஷத் தண்டையிற்போய், காஞ்சொறிக்காய் வாங்கினாற்போல. கற்பித்தவனுக்குக் கார்க்கக்கடன். கற்பித்தவன், கண்ணைக்கொடுத்தவன். கற்பித்தவன், காப்பாற்றுவான். கற்பில்லா அழகு, வாசனையில்லாப் பூ. கற்பெனப் படுவது. சொற்றவருமை. கற்றவிடத்திலேயா, வித்தையைக் காட்டுகிறது. கற்றறிந்தும், கழுனீர்ப் பானையில் கையிடுகிறதா? சுற்றுக் சுற்றுப், பேசாதே. சுற்றோரருமை, சற்றோரறிவார். கனரு செய்தால் இஷடம், கனயீனத்தால் நஷ்டம். கனத்த உடைமைக்கு, அனர்த்தமில்லை. கனத்த குடிக்கு, அனர்த்தமில்லை. கனத்தாராளம். மனது இறுகல். கனத்திற்கு நற்குணம், சுமைதாங்கி கனத்தைக் கனங்கார்க்கும், கருவாட்டுப் பானையை நாய் கார்க்கும். கனமழை பெய்தாலும், கருங்கற் கரையுமா? கனமூடன், கைப்பொருளிழப்பான். கனவிலுங் காக்கைக்கு, மலந்தின்பதே நிகனவு. கனவிற்கண்ட பணம், செலவிற்குதவுமா? கனவெலி, வளையெடாது. கனநேசம், கண்ணல் கொடுக்கும். கனிந்த பழம், தானே விழும். கன்றுகளாய்க்கூடி களம் பறிக்கப்போனால், வைக்கோலாமா செத்தையாமா? கன்று கெட்டால், காணலாந் தாயருகே. கன்றுகொண்டு கடாவடியடித்தால், வைக்கலுமாகாது செத்தையு மாகாது. கன்றுக்குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா. கட்டுத்தறியை படுங்கச்சொன்னார்களா? கன்றும் பசுவுங் காடேறிமேய்ந்தால், கன்று கன்றுவழிதான, ப பசுவழிதான். கன்றைத் தேடிய. கறவைப் பசுபோல,