பக்கம்:ஊசிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உச்சி குளிர
மெச்சிப் புகழ்கிறார்
காது களுக்குக்
கனத்த விருந்து
என்றன்.
விழிகள் மட்டும் விடுமா?
அவன் மேல் பாய்ந்தன...

இதோ அவன்
“கேக்" வெட்ட எழுகிறான்
கால்களோ தடுமாறு கின்றன;
தமக்கை
கைகளோ விரைந்து தாங்குகின்றன...
பாவம்
நாண் ஏற்றியதோர் வில்லைப் போல
”விண்” என்றிருக்க வேண்டிய
பிள்ளை
தேரை விழுந்த தேங்காய் போலத்
தேகம் மெலிந்து
தேய்ந்து போயுள்ளான்.
அவனது
முகவாசலிலே முதுமைச் சிறுக்கி
புள்ளி வைக்கிறாள் கோலம் போட...
எனினும்
இதோ அவன் ‘கேக்’ வெட்டுகிறான்.

நேற்று வரைக்கும்
வயிறு நிறையக்
கூழ் குடித்தானோ என்னவோ...

85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/87&oldid=1352412" இலிருந்து மீள்விக்கப்பட்டது