பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்றுகோல் 23 மணந்துகொண்ட மாட்சி, மனம்நெகிழுமாறு விளக்கப்பெற்றுள்ளது. அவ்வன்னையைப் பலவாறு மனமுவந்து பாராட்டும் பாட்டுப் புலவர், பெண்மைக்கும் இல்லறத்தின் பெருமைக்கும் மதிப்பளித் தார்; உண்மைக்கும் கதிரேசர் உயர்வுக்கும் வாழ்வளித்தார் என முத்தாய்ப்பு வைத்துரைப்பது குறிப்பிடற்பாலதாகும். நகரத்தார் மரபு பண்டிதமணியார் நகரத்தார் சமுகத்தில் பிறந்ததனால், இடையிடையே நகரத்தார் நலன்களைப் பாராட்டிக் குறைகளைச் சுட்டும் போக்குக் காப்பியத்தில் நிழலாடுகிறது. மேலும் காப்பியப் பாவலர் செட்டிநாட்டில் பல்லாண்டுகள் வாழ்ந்து, நகரத்தாரோடு நகரத்தாராகக் கலந்துறை வாழ்க்கை கொண்டவர். எனவே இவர் வாக்கில் இவ்வட்டார வழக்குகளும் இவர்தம் பழக்கவழக்கங்களும் வெளிப்படுதல் இயல்பேயாம். சிலசமயங்களில் இவர் பாடும் போது, நகரத்தாராய்ப் பிறந்தவர்க்குத் தலையைச் சற்றே நிமிர்த்திக் கொள்ளலாம் போலத்தோன்றும். "இலக்கியப் பண்பா டின்னும் இருக்கிற தென்றுகூறித் துலக்கிடச் செட்டி நாடே துணையெனச் சொல்லலாகும்’ (1:4) சைவமும் தமிழும் தழைத்தினி தோங்க நாளும் பணிபுரியும் நகரத்தாரைப் பின்புலமாகக் கொண்ட வரலாறு இது. எனவே மகிபாலன்பட்டியில் வாழ்வோர். பொருளினால் மிகுந்த மேலோங் புலமையிற் சிறந்தநூலோர் என்று போற்றப்படுகின்றனர். திரைவழி கடந்து சென்று, திறமையால் ஈட்டுவார் காட்டப் படுகின்றனர். உருவினால் சிறிய தவ்வூர், உளத்தினால் சிறந்த மாந்தர் எனப் பாராட்டி, வளரிளம் காடு சூழ்ந்து வனப்பினில் பொலிந்து தோன்றும், குளமெலாம் மீன்கள் துள்ளிக் குதித்திடும் இயற்கை யைக் காட்டி, - o "மனமதில் அமைதி காட்டி மதிவளர் புலமை கூட்டும் கனவுல கொன்று காட்டிக் கவிதையும் படைத்துக் காட்டும்’ (1:10)