பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்றுகோல் 33 கலப்பு மணத்தின் தேவையைப் பற்றிக் கவிதைபல பாடிய இவர் தாமும் கலப்பு மணம் செய்து கொண்டு தம் பிள்ளைகட்கும் கலப்பு மணம் செய்வித்துத் தம் கொள்கைக்கு வெற்றிதேடித் தந்துள்ளார். “அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்த பெருமை இவர்க்குண்டு சாதிசமயங்களுக்குள் ஆட்படாமை - நன்றி மறவாமை - அட்பைப் பேணல் - கொள்கைப் பிடிப்பு - குறிக்கோள் வாழ்வு - உதவும் உள்ளம் - ஒட்டார் பின் செல்லாமை - ஆசிரியர்ப் போற்றல் - ஆகியன இவர்தம் இயல்பிற் சில. 'சங்கப் புலவர்தம் பாடலே பாடல்” என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடைய இவர் பாட்டுலகில் பாரதியாரைப் பாட்டனா கவும், பாரதிதாசனாரைத் தந்தை - யாகவும் கருதிக் "குலமுறை கிளத்தும் கொள்கையுடையராக விளங்குகிறார். பெரும்பாலும் “தன்னை மறந்த லயம் தன்னில்” இருக்கும் இயல்பினர். "புட்டி”களின் துணையால் அன்று: எட்டியவரை சிந்திக்கும் இயல்பினால். கனவிலும் கவிதை பாடுவது என்பது இவருக்கே உள்ள தனித் திறனாகும். கனவிற்பாடிய கவிதையை மறுநாள் காலையில் எழுந்து வரிமாறாமல் எழுதிவிடும் இவரது ஆற்றல் வியப்புக்குரியது. இஃது இயற்கை வழங்கிய அருட் கொடை என்றே கூறல் வேண்டும். “அழகின் சிரிப்பு” என்ற இவர்தம் கவிதை 1950ஆம் ஆண்டு கோவையில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் முதற் பரிசுக்குரிய தெனப் பாவேந்தர்பாரதிதாசனால் தேர்ந்தெடுக்கப்பெற்ற சிறப்பினை யுடையது. 1966இல் “முடியரசன் கவிதைகள்” என்ற நூலும், 1973இல் "வீரகாவியம்” என்ற நூலும் தமிழக அரசின் பரிசிலைப் பெற்றன. சிறப்புக்குரிய பலபாடல்கள் சாகித்திய அகாதெமியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 1966இல் பறம்பு மலையில் நடந்த பாரிவிழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இவர்க்குக் “கவியரசு” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார். 1979ஆம் ஆண்டு பெங்களுர் உலகத் தமிழ்க் கழகத்தினர் இவரை அழைத்துப் பொன்னாடை அணிவித்துப் பொற்பேழையும் வழங்கினர். இதுபோலவே இவர்பாற் பயின்ற மாணவர் சிலர் இவர்தம் மணிவிழா நாளன்று (7-10-1979) பொன்னாடை போர்த்துப் பொற்கிழி வழங்கி மகிழ்ந்தனர்.