பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 68 கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 உலகியல் நன்கு தேர்ந்தார் இவரைப்போல ஒருவரில்லை. கலைபயில் அறிவும் அந்த உலகிய லறிவுங் கண்டோர் துலையினில் தூக்கிப் பார்ப்பின் மிக்கது தோன்றாராக அலைபடும் மனத்த ராவார். அவ்வணம் தெளிந்து நின்றார் 24 மேற்கணக்காய்க் கீழ்க்கணக்காய் மேவுபதி னெண்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்: பார்த்தலத்தில் வரவுபற்றுப்பார்க்கின்ற பணக்கணக்குங் கற்றுத் தேர்ந்தார்: மேற்புலத்தாற் றெளிவுபெறல். மிகுதிருவால் மேம்படுதல் வெவ்வே றென்ற நூற்கணக்கை மாற்றிவைத்த இவர்திறத்தை நுண்ணறிவை வியவார் யாரோ? 25 'இருவேறுலகத்தியற்கை என்ற குறளின் கருத்தை