பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிவிழாக் காதை


பழுத்தவர் அடியில் வீழ்ந்து
பற்பலர் வாழ்த்துப் பெற்றார்;
வழுத்துடன் பரிசில் நல்கி
வணங்கினர் மகிழ்வு பெற்றார்,
கழுத்தியல் மாலை தாங்கும்
கற்பினார் அருகில் நிற்கத்
தொழத்தகும் அம்மை யப்பர்
தோற்றத்தை நினைந்தி ருந்தார்.9

முற்பகல் நிகழ்ச்சி யெல்லாம்
முழுமையுஞ் சமயச் சார்பே;
பிற்பகல் நடந்த வெல்லாம்
பீடுயர் தமிழின் சார்பாம்;
முற்பகல் கண்ட தெல்லாம்
மூகபூ மாலை யாகும்;
பிற்பகல் கண்ட தெல்லாம்
பேசுபா மாலை யாகும்.10

மாநிதிக் கிழவ ரண்ணா
மலைமனர் தலைமை ஏற்கக்
கோநிதிக் கிழவர் கூட்டம்
குழுமியங் கினிதி ருக்கப்
பாநிதிக் கிழமை தாங்கும்
பண்பினர் வாழ்த்து ரைக்க
மாமதிக் கிழவர்க் கங்கே
மணிமலர் [1] ஒன்றைத் தந்தார்.11


  1. கரந்தைத் தமிழ் சங்கத்தார் படைத்த
    மணிவிழா மலர்