பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்



‘அயர்வின்றி விருந்தோம்பும் பண்பிருக்கும்;
அவர்பிறந்த செட்டி நாட்டின்
உயர்வொளிர அமைதிமிகும் கோலத்தில்
உடலிருக்கும்; கணவர்க் கென்றே
உயிர்வாழும் பெருமையுடன் மெல்லுடலில்
உரமிருக்கும்; காணுந் தோறும்
உயவந்த தமிழன்னை போல்வ’ரென,
[1]தெ. பொ.மீ உரைத்தார் அன்று 15

பெண்மைக்கு மதிப்பளித்துப் பேணிவரும்
வணிகர்குலம் பெருகும் நாட்டில்
தண்மைக்கு மனந்தந்த மீனாட்சி
ஆண்மைக்குத் தாம்ப ணிந்து
பெண்மைக்கு மதிப்பளித்தார். இல்லறத்தின்
பெருமைக்கும் மதிப்ப ளித்தார்
உண்மிைககும் கதிரேசர் உயர்வுக்கும்
வாழ்வளித்தார் அதுவே வாழ்க்கை. 16

பேனிய குழலில் தோன்றும்
பிசிரிலா இசையைப் போலக்
காணும்நல் வாழ்வு கண்டார்;
கனிவுறும் இனிமை அன்பு
பூணு நல் லழகு தூய்மை
பொலிசுவை அமைதி யாவும்
மாணுற அமைந்த வாழ்வு
மணிபெறும் வாழ்வே யாகும் 17


  1. பன்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார்