பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

மே மாதமும், ஜூன் மாதமும் எங்களுக்கு மிகவும் முக்கியமான மாதங்கள். அந்த மாதங்களில் தான் எங்களுக்குக் குழந்தை பிறக்கும். ஒரு தாய்க்கு ஒரு சமயத்தில் ஒரே ஒரு குழந்தைதான் பிறப்பது வழக்கம். ‘ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு’ என்று அதை நாங்கள் அன்பாக வளர்ப்போம்.

பிறந்து மூன்று காட்கள் வரை அதனால் நகர முடியாது. நாலாவது நாள் எப்படியோ தட்டுத் தடுமாறி எங்களோடு நடக்க ஆரம்பித்துவிடும். அந்தச் சமயம் யாராவது அதைத் தூக்க வந்தால்,