பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

எட்டு நாட்கள்


திருந்தார். அவரைப் பாதாளச் சிறைக்கு இழுத்துச் சென்று அடைத்தனர் பாதகர்கள்.

மாளிகையிலே இருந்தது பாதாளச் சிறை! ஆறு ஆண்டுகள் அதிலே அவரை அடைத்துவைத்தனர். ஒளி கண்களில் படுவதில்லை! பறவைகளின் இன்னிசையை அவர் செவி கேட்கவில்லை! இருட்டறை! தனி அறை! ஆடை களையப்பட்டு அலங்கோலமான நிலை! இரும்புச் சங்கிலிகள்! இந்தக் கொடுமை, ஆறு ஆண்டுகள், வெனிஸ் நகர மாளிகைச் சிறையில்.


நம்பிக்கையற்றவனை நல்வழிப்படுத்த, கையாண்ட முறை என்ன? அவன் உணரும் வண்ணம் உண்மையை அவன் முன் எடுத்து வீசினரா? இல்லை ! இரத்தம் பீறிட்டுக்கொண்டு வருமளவுக்குச் சவுக்காலடித்தனர் ! மார்க்க ஏடுகளை அவன் முன் கொட்டி, 'மதியிலி ! இதைப்படி, அறிவுபெறு" என்றனரா ? இல்லை, கட்டி வைத்து அடித்தனர். இரும்பு வளையங்களிட்டு இம்சித்தனர். இரும்புப் பலகைமீது சாயவைத்து, இரும்பு முள் வளையங்களுள்ள உருளைகளை அவன்மீது உருட்டுவர்; ஆழப்பதிந்து எலும்பு வரை உள்ள சதையைப் பிய்த்து வெளியே கொண்டுவரும்--சிலர் மாண்டுவிடுவதுண்டு, பெரும்பாலானவர்கள் குற்றுயிராகிவிடுவர். இரத்தம் கசியக் கசிய அவன் வேதனைப் படும்போது, வேதத்தை ஏற்றுக்கொள்கிறாயா என்று கேட்பர்; அவன் தேகம், சல்லடைக் கண்போலத் துளைக்கப்பட்டுக் கிடக்கும்போது, "தேவனை பூஜிக்கிறாயா ?" என்று கேட்பர். அவன் குற்றுயிராகக் கிடக்கும்போது, "குருவுக்குக் கீழ்படிகிறாயா?' என்று கேட்பர். பழத்தைச் சாறுபிழிந்து பருகி இன்பம் பெறுவர் மக்கள். இந்த மகானுபாவர்கள் பகுத்-