பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

177

கணக்கெடுத்து, மீறுவோரை மட்டும் சிறைப்படுத்தி, மீறாதவர்களை கழகம் நடத்த விட்டுவைக்கும் என்று எண்ணி ஏமாறக்கூடாது. கழகம் என்ற அமைப்பே அழிக்கப்பட்டுவிடும். கழகத்தவர் என்ற நிலையே எவருக்கும் இருந்திடாது.

கழகமும் அழிந்து, கழகத்தவரில் மிகமிகச் சிலர் மட்டுமே சிறைப்பட்டனர்