பக்கம்:எதிர்காலத் தமிழ்க் கவிதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா : 37 அதில் வரலாற்றுப் பார்வையும் தத்துவப் பார்வையும் கைகோத்து நிற்கக் காண்கிறோம். தமிழ்க் கவிஞர்கள் அப்படி எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். (காந்தியைப் பாரதி சரியாக பார்த்துத் தெளிந்தே "வாழ்க நீ எம்மான்..." என்று பாடினான்.) - சுருக்கமாக எதிர்காலத் தமிழ் கவிதையில் மனிதநேயம் (Humanism) æñøJGg;&àuib (Internationalism) ĜæTEFøŜαlb (Socialism) (5Li'll judo (Realism) @ silloué 3,053%ugb (Optimism) ஆகியவை பின்னிப்பிணைந்திருக்க வேண்டும் எனலாம். இவை இப்போது அறவே இல்லை என்று சொல்லவில்லை. ஒரு சிலரிடம் இருப்பதைக் காட்டியிருக்கிறேன். இன்னும் இப்படி எழுதுவோர் தொகை பெருக வேண்டும் என்பது என் ஆசை. எதிர்காலத் தமிழ்க்கவிதை வளர்ச்சிக்கு விமர்சகர்களின், பத்திரிகைகளின் பங்கும் அவசியம் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மலையாளக் கவிஞர் சங்கர குரூப், நான் விமர்சகர்களால் வளர்ந்தேன் என்று பெருமையோடு குறிப்பிட்டு உள்ளார். விமர்சகர்கள்தாம் கவிஞர்களின் பார்வையைக் கூர்மைப் படுத்த முடியும். எனவே நல்ல கவிஞர்கள் தோன்ற வேண்டுமானால் முதலில் நல்ல விமர்சகர்களைத் தோற்றுவிக்க வேண்டும். தமிழில் லட்சக்கணக்காக விற்கும் பெரும் பத்திரிகைகள் கவிதைகளை வெளியிடுவதில்லை. 'கதை, கட்டுரை, கவிதைகளின் காணப்படும் பெயர்களெல்லாம் கற்பனையே’ என்று முதற் பக்கத்தில் காணப்படுவ தென்னவோ உண்மை. ஆனால் அந்தப் பட்டியலில் கவிதையைச் சேர்த்திருப்பதுதான் பெரிய கற்பனை. அண்மைக் காலத்தில் இரண்டு பெரும் பத்திரிகைகள்