பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன? ஏன்? எப்படி?

ஒருவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா என்று எப்படிக் கண்டு பிடிப்பது? கடவுள் சின்னத்துக்கோ, கோயிலுக்கோ ஆபத்து நேரிடு கிறதென்று வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பொறுக் காமல் கடவுளைக் காப்பாற்றப் போகிறவர் கடவுள் நம்பிக்கையில்லாதவர். எல்லாம் வல்ல கடவுளின் ஆற்றலில் நம்பிக்கையில்லாதவர்களே ஆத்திரவசப் படுவர். ஐயோ லட்சுமணா என்று குரல் கேட்டவுடன், இலட்சுமணன் பதட்டப்படவில்லை. அவனுக்கு இராமனின் ஆற்றலில் நம்பிக்கையிருந்தது. சீதை பதறினாள்; இராமன் மனைவியாகப் பழகியும் அவளுக்கு அவனுடைய வல்லமையில் நம்பிக்கையுண்டாகவில்லை. கடவுள் மீது முழு நம்பிக்கையுள்ளவர்கள் எதைக் கண்டும் பதறுவதில்லை,

தமிழில் பக்திச் சுவை ததும்பும் நூல் எது? திருவாசகம், திருவருட்பா. மற்ற சமய நூல்களெல்லாம் பக்தியின் பெயரால் வேறு வேறு நோக்கங்களையும் கொள்கைகளையும் கொண்டவையாக இருப்பதால் அவற்றை நிறைவான பக்தி நூல்கள் என்று சொல்ல முடியாமல் இருக்கிறது.

மிகுதியாகப் பாவம் செய்பவர்கள் யார்? ஆத்திகரா? நாத்திகரா? -

தெய்வ நம்பிக்கையில்லாத நாத்திகர்கள் மனித அன்பைத் தமது கொள்கையாகக் கொண்டுள்ளதால், மாந்தரிடையே அன்பு மனப்பான்மை வளரவேண்டும் என்கின்றனர். ஆத்திகர்களோ தெய்வத்திற்காக எதுவும் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் பாவம் என்று கருதாமலே செய்கின்றனர். போலி ஆத்திகர்கள்