பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9 தேர்ச்சி பெறல். 1930 : எசுதர் அம்மையாரை மணந்து கொள்ளல், 1931 : 'மொழியாராய்ச்சி-ஒப்பியன் மொழிநூல்' எனும் முதல் மொழியாய்வுக் கட்டுரை செந்தமிழ்ச் செல்வி இதழில் வெளியாதல்-சை.சி. நூ. ப. கழகத் துடன் அணுக்கத் தொடர்புண்டாதல். 1935 : 'திராவிட மரபு தோன்றிய இடம் குமரி நாடே' என்னும் தலைப்பில் கீ. க. மு. (M.O.L.) பட்டத் திற்கான இடுநூலை எழுதத் தொடங்கல். 1939 : அவ் இடுநாலைச் சென்னைப் பல்கலைக்கழகம் தள்ளி விடுதலும், இனிமேல் இந்தியாவுக்குள் எனக்கு ஒரு தேர்வும் இல்லை என்று பாவாணர் முடிவு செய்தலும். 1944 : சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியப் பொறுப் பேற்றுப் பன்னிரண் டாண்டுகள் (1956 வரை) பணிபுரிதல், 1949 : சொல்லாராய்ச்சியில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் பாவாணர் என்று மறைமலையடிகள் பாராட்டுச்சான்றிதழ் வழங்கல். 1952 : சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழி தாமே தமித்துப் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெறல். 1956-1961 : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திரா விட மொழியாராய்ச்சித்துறை வாசகராகப் பணியாற்றுதலும் தமிழ்ப்பகைவர் சூழ்ச்சியால் அங்கி ருந்து வெளியேறிக் காட்டுப்பாடியில் குடிபுகலும். இக்காலகட்ட வரலாற்றை விளக்குவதே இந்நூல்.