பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வதும் எளிதாயிருந்திருக்கின்றது. இச்செய்திகள் முன்பு எனக்கு மறைவாயிருந்து பின்பு வெளிப்படுத்தப்பட்டன, நீண்டநாளாக ஒன்றும் தெரியாமையால், அண்ணா மலைப் பல்கலைக்கழக வேலையைப்பற்றி நான் ஐயுற்றுக் கொண்டிருந்தபொழுது, ஒருநாள் எதிர்பாராத நிலையில் துணைக் கண்காணகரிடமிருந்து அமர்த்தோலை வந்தது. ஓரளவு பசியடங்கினவன் பெற்ற உணவுபோல் அதைப் பெற்றுக்கொண்டேன். ஆயினும் துணைக்கண்காணகரின் அன்பார்ந்த முடங்கலும், தமிழ் வேர்ச்சொல்லகரமுதலித் தொகுப்புப் பற்றிய எண்ணமும், இன்புறுத்தின். இவ் வின்பம் இரண்டொரு நாளேயிருந்தது. ஏனெனின், எனக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்று வந்த வுணவு நஞ்சூட்டப்பட்டதென்பது பின்புதான் தெரிய வந்தது. அமர்த்தோலை வந்து இருநாட் சென்றபின், அதன் தொடர்ச்சியாக மற்றோர் ஓலை வந்தது. அதன் உறை யைப்பிரித்துப் பார்த்தேன். என் அ.மய க.க. பணியை மேற் பார்க்குமாறு, MOU க. வங்கச் சட்டமன்றத் தலைவரும் ஓய்வு பெற்ற சமற்கிருதப் பேராசிரியரும் மொழி நூலாசிரியரு மான பண்டாரகர் சுநீதிக் குமார சட்டர்சி (தலைவர்). உ. பூனாப் பட்டக் கல்விப் பின்னை ஆசிரியப் பயிற்சி யாராய்ச்சித் தக்கணக் கல்லூரித் தலைவர் பர். கத்தரே, SU கூ. மைசூர்ப் பல்கலைக்கழகக் கன்னடத் துறைத் தலைவர், பேராசிரியர், சீகண்டையா,