பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 7-ஆம் எண் உறையுளும் ஒதுக்கப்பட்டது. அது வெறுமையானவுடன், அதிற் குடியமர்ந்து கொண்டேன் ஓராண்டு தனித்திருக்க நேர்ந்ததினாலும், உண்டிச்சாலை உணவு என் உடம்பிற் கொவ்வாமையாலும், முத லாண்டு முழுதும் நானே சமைத்துண்டேன். கைச் சமையல் உடல் நலத்திற்கேற்றதேனும், நான் விரும்பிய வாறு முழு நேரமும் பல்கலைக்கழகப் பணிக்குச் செலவிட முடியாது போயிற்று. 12-9-1956 அன்று துணைக்கண் காணகரிடமிருந்து ஓர் ஓலை வர்தது. அதன் உள்ளடக் கம் (மொழி பெயர்ப்பு) வருமாறு : "இப் பல்கலைக் கழகத்திற் புதிதாய் ஏற்படுத்தப் பட்டுள்ள ஒப்பியல் மொழித் துறையைச் சேர்ந்த வாச கர்க்கு அறிவுரை கூறவும், வழிகாட்டவும், அவர் பணி யைப்பற்றி உசாவவும் ஒரு திறவோர்குழு இப்பல்கலைக் கழகத்தில் அமைக்கப் பட்டுள்ளதென்று நான் கூற வேண்டியுளது. அக் குழுத் தலைவர் காளிக்கோட்ட மேலை வங்கச் சட்டமன்றத் தலைவர் பண்டாரகர் (எசு.கே.) சட்டர்சி, இப் பல்கலைக் கழக ஒப்பியல் மொழித்துறை வாசகரான திரு. ஞா. தேவநேயப் பாவா ணர், அக்குழுவின் உறுப்பினரும் செயலாளருமாவார். ஏனையுறுப்பினராவார் : பண்டாரகர் (எசு. எம்.) கத்திரே (எம்.ஏ., பிஎச்.டி.), இயக்குநர், தெக்காணக் கல்லூரி, பட்டக் கல்விப் பின்னை ஆராய்ச்சிக்களரி, பூனா-6. திரு (ஏ.) சுப்பையா அவர்கள், துணைத் தலைவர். தமிழ்ப் பண்பாட்டுக் கலைமன்றம், தெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை. பேரா. ரா. பி. சேது அவர்கள் (பி.ஏ., பி.எல்.), தமிழ்ப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.