பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தாலும் போதும்; ஆயின் பல்கலைக் கழக வருமானம் குன்றாதிருத்தல் வேண்டும். ஆங்கில ஆட்சி நீங்கிய பின், ஆரியப் பேய் மீண்டும் தலை விரித்தாடுகின்றது. ஆரியத்திற்கு மாறாய்த் தமிழை வளர்ப்பின், நடுவணரசு நல்கை (Central Govt. Grant) அடியோடு நீங்காவிடி னும் அடிமட்டத்திற்கு வந்துவிடும். ஆரியத்தை வளர்ப் பதற்கே பல்கலைக்கழக நல்கைக் குழுவும் (U.G.C.) சமற் கிருதக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாட்சி யும் அத்திட்டத்தைச் சேர்ந்ததே. அதனால், வங்கப் பாட்டும் வந்தே மாதரப் பாட்டும் தமிழிற்கும் தமிழிசைக் கும் தோன்றிய 'அண்ணாமலைப் ப.க. கழகத்தை விட்டு நீங்கிய பாடில்லை. புதுக்கோட்டையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத் தில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப்பணி செவ் வையாய் நடைபெறவில்லையாமே யென்று ஒருவர் கேட் டதற்கு, அரசவயவர் முத்தையா அவர்கள் அது தவ றென்று சொன்னதுடன் அமையாது, "வட நாட்டினின்று பணம் வரவேண்டியிருக்கிறது. அது வந்தபின் பார்த் துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்கள். பேரா. தெ. பொ. மீ. ஆரியக் கொள்கையினராத லால், வடநாட்டில் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளதென்றும், அதனாற் பல்கலைக் கழகத்திற்கு நிரம்பப் பணம் வந்து சேர்கிறதென்றும் சொல்லப்படுகின்றது. என்னாலோ, வருகின்ற பணம் குறையுமேயன்றிக் கூடாது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை யினும் அ.ம.ப.க. கழகத் தமிழ்த்துறை சீர்கெட்டது. அறிவியல் துறைக் கட்டிடத்திற்கு அடிப்படைக்கல் நாட்டத் தில்லையிலிருந்து ஒரு பிராமணர் வந்து ஆரிய மந்திரமோதித் தீ வளர்த்தார்.