பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நியூயார்க் மாநிலத்தில் உள்ளவை 83

இந்த ஏற்பாடு செட்டி நாட்டிலுள்ள இத்தகைய ஒர் ஏற்பாட்டை நினைவு கூரச் செய்கிறது. செட்டி நாட்டில் நகரத்தார் வாழும் பகுதியில் உள்ளவர்கள் தாம் இறக்கும் போது செய்ய வேண்டிய ஈமச் சடங்கிற்காக ஒரு தொகையை ஒதுக்கி வைப்பார்கள். அது வட்டியும் முதலுமாக வளர்ந்து வரும். உரியவர் இறந்த அன்று அத் தொகையை எடுதது திருமணவிருந்து போல் நடைபெறச் செய்வர். ஒருபக்கம் பிணம் கிடக்க மறுபக்கம் விருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். நம் போன்றோர் துக்கம் விசாரிக்கச் செல்லும்போது இதனைப் பார்க்கச் சகிக்காது. விருந்தில் பங்கு கொள்ளாது துக்கம் விசாரித்த நிலையில் நாம் திரும்பிவிடுகின்றோம். இஃதுடன் இது நிற்க.

ரூஸ்வெல்ட் தீவிலிருந்த வண்ணம் மான்காட்டன் தீவையும் குயின்ஸ் தீவையும் பாலம் ஒன்று இணைப்பதையும் கண்ணுறுகின்றோம். இருமுனைகளில் அமைந்த இருபெரும் முதியோர் மருத்துவ மனைகளுக்கிடையில் அமைந்துள்ள பல கட்டடங்கள் மக்கள் வாழும் இல்லங்கள் ஆகும். இந்த இருபெரும் முதியோர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களும் மான்காட்டனில் பணியாற்றுபவர்களும் இவ்வாழ்விடங்களில் வாழ்ந்து வருபவர்கள் ஆவர். (படம்-24)

ரூஸ்வெல்ட் தீவின் ஒரு பக்க ஒரமாக நடந்து கொண்டும் சிலசமயம் ஆங்காங்கு அமைக்கப் பெற்றிருந்த இருக்கைகளில் சில மணித்துளிகள் அமர்ந்தும் குயின்ஸ் தீவில் தொலைவில் தென்படும் பெரிய கட்டடங்களின் காட்சிகளைக் கண்டனுபவித்தவாறும், காலங் கடத்தினோம். அடுத்து மான்காட்டன் தீவு பக்கமாக வந்து இதே நிலையில் நடந்து கொண்டும் அமர்ந்த நிலையிலும் பல கட்டடக் காட்சிகளைக் கண்டு அனுபவித்தோம்.

ஒருநிலையில் மான்காட்டன் பக்கம் பல்லடுக்கு மாளிகைகள் அடங்கிய ஐக்கிய நாட்டு அமைப்பு நிறுவனம்” என் கண்ணில் தென்பட்டது. அருகிலிருந்த என் மகன் டாக்டர் இராம கிருஷ்ணன் அக்கட்டடம் பற்றி விரிவாக விளக்கினான்”. (படம் - 25)

உடனே என் மனம் ஐம்பது ஆண்டுகளின் கால நிலைக்குத் தள்ளப்பெற்றது. இந்த நிறுவனத்தின் ஆதரவில் எழுந்த உலக உடல் நல நிறுவனம்”, ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் நிறுவனம்” போன்றவற்றில் பங்குபெற்றவைகள் எல்லாம் படலம் படலமாக என் நினைவில் எழுகின்றன. பின்னவற்றின் ஆதரவின்கீழ் தொடங்கப்பெற்ற நான்

9. U.N.O - United Nations Organization. 10. பிறிதோரிடத்தில் இதன் விவரம் தரப்பெற்றுள்ளது. 11. World Health Organization. 12. United National Education and Science Organization.