பக்கம்:என் அமெரிக்கப் பயணம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 ♦ என் அமெரிக்கப் பயணம்

5 மணிக்கு மேல் அமையும் பகலவன் மறையும் மாலை நேரக் காட்சி இலவசமாகக் காட்டப்பெறும். நாள்தோறும் 9-30 முதல் 11-30 வரை பார்வையாளர் அனுமதிக்கப்பெறுவர். பாதுகாப்பு ஏற்பாடுகளால் சுணக்கம் அதிகம். கட்டணம் 13 டாலர். 65 அகவைக்கு மேலுள்ளவர்கட்கு 9% டாலர்; 13-17 அகவை வரை 11 டாலர்; 6-12 அகவை வரை 6% டாலர்.

இந்த இரட்டை கோபுர அடுக்கு மாளிகைகள்தாம் பின்லேடன் என்ற தீவிரவாதியால் அழிக்கப்பெற்றன; உலக மக்கள் துக்கக்கடலில் ஆழ்ந்தனர்.

மான்காட்டன் நடுப்பகுதி

1. அமெரிக்கன் அருங்காட்சியகம் (இயற்கை வரலாறு)[1]

2. மத்திய பூங்கா[2]

3. எம்பயர் ஸ்டேட் கட்டடம் [3]

4. இன்ட்ரெபிட்என்ற மிதக்கும் அருங் காட்சியகம் [4]

5. நியூயார்க் பொது நூலகம்: இஃது ஒர் ஆய்வு நூலகம்; இது 5 மில்லியன் (50 இலட்சம்)நூல்களைக் கொண்டது; இவற்றில் பிரத்தியேகமான அமெரிக்கன் வரலாறு, கலைபற்றிய பருவஏடுகள்[5], யூத கீழ்த்திசை இலக்கியம் அடங்கும். முக்கிய அறைகள் செவ்வாய்-புதன் 11-7.30 மணி; வியாழன்-சனி 10-6 மணி, திறந்து வைக்கப்பெறும்; விடுமுறை நாட்களில் மூடப் பெற்றிருக்கும். அனுமதி இலவசம்.

6. இராக்ஃபெல்லர் மையம்[6]: இது நிலவறைக்குக் கீழே இருபத்து நான்கு ஏக்கர் பரப்பில் கடைகள், உணவு விடுதிகளைக் கொண்டது. நகரமைப்புத் திட்டத்திற்கு மாதிரியாக இருப்பது.நாமாகச்சென்று பார்ப்பதற்கு வழிகாட்டும் குறிப்பேடு தகவல் மையத்தில் வழங்கப்பெறும்.

7. என்.பி.சி படம் எடுக்கும் அமைப்பு[7]: பல்வேறு தொலைக் காட்சிப் படங்கள் எடுக்கப் பெறும் இடம். செய்திகள் முதலியவை படமாக எடுக்கப்பெறும். திங்கள்-சனி 8.30-5.30 மணி, ஞாயிறு 9.30-4.30 மணி, 15 மணித்துளிகள் பார்க்கலாம். 7 மணி முதல் நுழைவுச் சீட்டு விற்பனை தொடங்கும். கட்டணம் 17½ டாலர் முதியோர், 6-16 அகவையோருக்கு 15 டாலர் 6 அகவைக்குக் கீழுள்ளவர்க்கு அனுமதி இல்லை.


  1. விளக்கம் இந்நூல் பக்.60 காண்க
  2. விளக்கம் இந்நூல் பக்.52 காண்க
  3. விளக்கம் இந்நூல் பக்.78 காண்க
  4. விளக்கம் இந்நூல் பக்.65 காண்க
  5. Periodicals
  6. Rockfeller Center
  7. NBC (National Broadcasting Corporation) Studio Tours.