பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


மகாமகோபாத்தியாய
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்களின்
வாழ்க்கை நிகழ்ச்சிகள்

19-2-1855 திங்கட்கிழமை. தஞ்சை மாவட்டத்திலுள்ள சூரியமூலை என்னும் ஊரில் பிறந்தார்.

1861 அரியிலூர் சடகோப ஐயங்காரிடம் பாடங் கேட்கத் தொடங்கியது.

1862 உபநயனம்—பெயர்: வேங்கடராமன்.

16-6-1868 திருமணம்-மனைவி : மதுராம்பாள்.

1869 செங்கணம் விருத்தாசல ரெட்டியாரிடம் யாப்பருங் கலக்காரிகை பாடம் கேட்டது.

1871 மாயூரத்தில் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணவனாகச் சேர்ந்தது. ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரைச் சந்தித்தது: ஆசிரியர் இட்ட பெயர் சாமிநாதன். திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர். வித்துவான்தியாகராச செட்டியார் இவர்களுடைய தொடர்பும் ஆதரவும்.

1872 ஆசிரியருடன் திருவாவடுதுறை சென்றது.

1873 உத்தமதானபுரத்தில் கவி இயற்றியது. ஆவுடையார் கோயிலில் புராணப் பிரசங்கம்.

1874 செங்கணத்தில் முதன்முதல் நூல் இயற்ற ஆரம்பித்தல் நூலின் பெயர் "நீலி இரட்டை மணிமாலை." திருவிளையாடற் புராணப் பிரசங்கம்.

11-2-1876 ஆசிரியர் மறைவு. வேதநாயகம் பிள்ளை சந்திப்பு. திருவாவடுதுறை மடத்தில் ஆசிரியராகவும். மாணாக்கராகவும் பணியாற்றல்.

1877 ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை ஐயாவர்களின் தந்தையார் கண்டு உரையாடியது. ஐயரவர்கள் வசிப்பதற்குத் தேசிகர் இல்லம் அமைத்துக் கொடுத்தது. மாத வேதனம் அளித்தமை.

1878 மதுரை, திருநெல்வேலிப் பயணம். ஆதீனகர்த்தர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஐயரவர்களுக்குச் சன்மானம் அளித்தது.

1880 வித்துவான் தியாகராச செட்டியார் அவர்களின் விடா முயற்சியால், கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பெற்றது. சேலம் இராமசுவாமி முதலியார்