பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

99



ஆகையால், புலிகளைப் பற்றிச் செய்திகள் வெளியாவதை அவரும் ஆட்சேபிக்க மாட்டார். நீங்களாகக் கற்பனை செய்து கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல. தேவையானால் என்னை மாற்றுங்கள்’ என்று உரக்கக் கூவினேன். எங்கள் செயலாளர் மகேஷ் பிரசாத், 'ரிஷி கர்ப்பம் இரவு தங்காது' என்பது போல், உடனடியாகக் கோபத்தைக் காட்டி, நடவடிக்கை எடுக்கக் கூடியவர். ஆனாலும், பொறுமையாக இருந்தார். இந்தக் கூட்டம் முடிந்ததும், என்னைப் பற்றி உயர்மட்டக் குழு ஒன்று ஆய்வு செய்திருக்கிறது. அப்போதைக்கு என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையில்லை என்று செயலாளர் தீர்மானித்து விட்டதாக அறிந்தேன்.

மத்திய அரசு கலைஞர் அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தாலும், தமிழக அரசியல் நிர்பந்தம் கருதி, ராஜீவ் காந்தியின் தூண்டுதலில், ஜெயலலிதாவின் வற்புறுத்தலில், கலைஞர் அரசு 1991ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அதே இணைச் செயலாளர் சென்னைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் வரவேற்கச் சென்றேன். என்னைப் பார்த்ததும், ‘கங்குராஜுலேஷன்யா’ என்றார். உடனே நான், எனக்கு, இணை இயக்குநர் பதவி வந்து விட்டதாகக் கருதி, நன்றி தெரிவித்தேன். எந்த இடத்தில், எந்தப் பதவியில், நான் நியமிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை அவரே சொல்லட்டும் என்பது போல் ஆவலோடு பார்த்தேன். உடனே அவர் ‘உங்க நண்பர முடிச்சிட்டோம். பார்த்தீங்களா’ என்றார். அப்போதும் புரியாமல், நான் அவரைப் பார்த்த போது 'கருணாநிதியைத்தான் சொல்றேன். டிஸ்மிஸ் பண்ணிட்டோமே, உங்களுக்கு சந்தோஷம்தானே' என்றார்.

நான் சந்தோஷப் படவில்லை. இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எப்படிப் பச்சோந்திகளாக மாறுகிறார்கள் என்பதை முன்பே பார்த்திருக்கிறேன் என்றாலும், இப்போது அவரை அழுத்தமாகப் பார்த்தேன். ஒரு வகையில் சொல்லப் போனால், அரசியல்வாதிகளை விட ஆபத்தானவர்கள் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.காரர்கள் தான். அரசியல்வாதிகளுக்குக் குறுக்கு வழியைச் சொல்லிக் கொடுப்பவர்களே இவர்கள்தான். இந்த அரசியல்வாதிகளுக்காவது, கட்சி, மக்கள், தேர்தல் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இவர்களுக்கோ, வடமொழி மந்திரம்