பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

என் பார்வையில் கலைஞர்



'மேடம்! உங்களுடைய உண்ணாவிரதத்தால், கர்நாடகத் தமிழர்கள் தாக்கப்படலாம். தமிழ்நாட்டிலும் கன்னடர்களுக்கு எதிராகக் கலவரங்கள் வெடிக்கலாம்’

‘அதற்கு நான் என்ன செய்யணும் என்கிறீங்க’

‘அதனால சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும்படி, தமிழகக் காவல் துறைக்கு ஆணையிட்டீர்களா? கர்நாடக முதல்வரைத் தொடர்பு கொண்டு, தமிழர்கள் தாக்கப்படாமல் காக்கப்பட வேண்டும் என்று சொன்னீர்களா?’

‘நீங்க அடிப்படை பிரச்னையத் திசை திருப்புறிங்க’

‘இல்ல மேடம்! உங்க உயிர் முக்கியமானதுதான். இதில் கருத்து வேறுபாடே கிடையாது. அதே சமயம், கர்நாடகத் தமிழர்களின் உயிரும், உடமையும் மிகவும் முக்கியமானது. இதனால்தான் பின் விளைவுகளைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டினேன்.’

பாதித் தமிழிலும், பாதி ஆங்கிலத்திலும் நடந்த இந்த உரையாடலை ஜெயலலிதாவே முடிவுக்குக் கொண்டு வந்து, முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டார். அவருக்கு அருகே நின்ற மற்ற அதிகாரிகளின் முகங்கள் எனக்கு நினைவுக்கு இல்லை. ஆனால், இடது பக்கமாக நின்ற அப்போதைய காவற்துறைத் தலைவரான ஸ்ரீபால் அவர்கள், டக்கென்று ‘அட்டென்சனுக்கு’ வந்தார். ஸ்ரீபால் அவர்களின் பணி முறை எப்படியோ... ஆனால்... இனிமையான மனிதர். மிகச் சிறந்த இலக்கியவாதி. மென்மையாகவும், அழுத்தமாகவும் பேசக் கூடியவர்.

மறுநாள், பத்திரிகையாளர்களுக்கும், ஆளுங் கட்சிப் பேரவை உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செல்லப் பிள்ளையாக விளங்கி, இப்போது தொல்லைப் பிள்ளையாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ‘அண்ணாச்சி ஆற்றுல தண்ணி போவுது... நீயும் குடிக்க மாட்டேங்க எங்களையும் குடிக்க விடமாட்டேங்க. அம்மா கேட்கச் சொன்னாங்க. உங்களுக்கு என்ன குறை சொல்லுங்க அண்ணே. நாங்க தீர்த்து வைக்கிறோம். எதுக்குண்ணே அம்மா கிட்ட அப்படி கேள்வி கேட்டீங்க. உங்கள நல்லா கவனிக்கலன்னு அம்மா எங்களத் திட்டுறாங்க, சமுத்திரத்திற்கு என்ன குறை