பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

149


தோழமை என்ற
ஒரு சொல்லாக
நம்பூதிரிபாத்-கலைஞர்


1998ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பத்தாம் தேதி நானும் தோழர் சின்னப்ப பாரதியும் கலைஞரைச் சந்திக்க அனுமதிக் கிடைத்தது.

அன்று காலை ஒன்பது மணிக்கு கலைஞரை சந்திக்க அனுமதி கிடைத்தது. காலை எட்டேமுக்கால் மணிக்கே சென்றுவிட்டோம். அன்றைக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சி.பா என்று அன்போடு அழைக்கப்படும் முனைவர் சி.பாலசுப்பிரமணியம் அதிகாலையில் காலமாகி விட்டார். இனிமையாக இயல்பாக பழகும் தமிழறிஞர். எனது சத்திய ஆவேசம் என்ற நாவல் வெளியீட்டு விழாவில், இந்த படைப்பைப் பற்றி, அவர் விலாவாரியாக பேசியது இன்றும் இனிமை நினைவுகளாக நிழலாடுகின்றன. அதே சிபா அவர்கள் எங்கள் சந்திப்பு நாளில் அதிகாலையில் மரணமாகி விட்டார். கலைஞரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக பார்வையாளர்கள் நேரத்தை தவிர்க்க முடியாதபடி ரத்து செய்து விட்டார்.

நாங்கள் கலைஞர் இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்ததும் சண்முகநாதன் அவர்கள் நிலைமையை விளக்கி விட்டு, ‘எதற்கும் போய்ப் பார்க்கிறேன்’, என்ற தெரிவித்து விட்டு கலைஞரை சந்திக்க சென்றார். ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து எங்கள் இருவரை மட்டும் சந்திக்க கலைஞர் அனுமதி கொடுத்ததாக தெரிவித்தார். விரைவாக பேசிவிட்டு வந்து விடும்படியும் அறிவுரை கூறினார். கலைஞரை சந்திக்க முன் அனுமதி பெற்றிருந்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், கட்சித் தலைவர்கள், மேற்கு வங்க அரசின் உயர் அதிகாரி ஒருவர் ஆகியோர் திருப்பி அனுப்பப் பட்டார்கள். அவர்கள் அப்படி