பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

என் பார்வையில் கலைஞர்


கலைஞர் வெளியிட இருக்கும் ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் என்ற சிறுகதைகளில் பெரும்பாலானவை அரசியல் கதைகள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த காலடி கலாச்சாரத்தை சாடும் கதை எதிர் பரிமாணம். ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும் தமிழகத்தை அரசியல் கட்சிகள் அத்தனையும் என்ன பாடு படுத்துகின்றன என்பதை விளக்குகிற கதை.

எல்லாவற்றிற்கும் மேலாக ஐம்பெரும் விழா, பொறுத்தது போதாது ஆகிய சிறுகதைகள் திராவிட இயக்கத்தையும், கலைஞரையும் சாடக் கூடியவை. முதல் கதையான ஐம்பெரும் விழா எடுத்த எடுப்பிலேயே திராவிட இயக்கத்தை கிண்டல் செய்யும் ஒரு அங்கதக் கதை. கலைஞர் இவற்றை படித்து விட்டு விழாவிற்கு வருவாரா என்று எனக்கு சந்தேகம் ஏற்பட்டு விட்டது. அதே சமயம் இந்தத் தொகுப்பை உருவாக்கும் போது அவர் தான் வெளியிட வேண்டும் என்ற அனுமானத்தோடு தான் இந்தச் சிறுகதைகளை உள்ளடக்கினேன். இப்போது விழா தேதி நிச்சயிக்கப்பட்டு விட்டதால் கலைஞர் வருவாரோ, மாட்டாரோ என்பது மாதிரி மனதிற்குள் ஒரு புலம்பல் ஏற்பட்டது. கலைஞர் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்றும் ஒரு உதறல் எடுத்தது.