பக்கம்:என் பார்வையில் கலைஞர்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

என் பார்வையில் கலைஞர்



கலைஞர் நிச்சயம் இதைப் படித்திருக்க வேண்டும். அப்போது, குங்குமம் வார இதழில் எனது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக வெளியிடப்படுவதாக இருந்தது. அது வெளி வரவில்லை. நானும் அதை எதிர் பார்க்கவில்லை. ஆனாலும், குங்குமத்தில் பராசக்தி பதிலில் என்னை 'இலக்கிய ஜெயலலிதா’ என்று வர்ணிக்கப் பட்டிருந்தது.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இன்னொரு தாக்குதலைத் தொடுத்தேன். தொடுத்ததாக நினைத்தேன். தமிழகத்தின் மிகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான வலம்புரி ஜானின் மகள் திருமணம் சென்னை எழும்பூர் இம்பீரியல் ஓட்டலில் நடைபெற்றது. முதல்வர் கலைஞர்தான் திருமணத்தை நடத்தி வைத்தார். வலம்புரி ஜான், லேட்டஸ்ட் விவரம் தெரியாமல், என் பெயரையும் வாழ்த்துரையில் சேர்த்திருந்தார். பெரும்பாலும் கழகத் தொண்டர்களே அதிகமாக இருந்தார்கள். தமிழகத்தின் தலை சிறந்த கவிஞர்கள், பிரமுகர்கள் கூடியிருந்தார்கள். மரபுக் கவிதையில் கொடி கட்டிப் பறக்கும் கவிஞர் இளந்தேவன், வரவேற்புரை ஆற்றியதோடு ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து பேச வைத்தார்.

என் முறை வந்த போது, நான் கறுப்புத் தங்கம் என்றும், சாகித்ய அகடாமியின் விருது பெற்ற தகுதி மிக்க எழுத்தாளர் என்றும் தெரிவித்தார். கூட்டத்தினர் கை தட்டவில்லை. ஏனென்றால், இந்த நிகழ்ச்சிக்கு ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தினமலர் பத்திரிகையில், கலைஞருக்கு எதிராக ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். அவர்தான் என்னை சென்னை வானொலிக்கு தூக்கியடித்தார் என்று குறிப்பாகச் சொல்லியிருந்தேன். இதை தெரிந்து வைத்திருந்த தொண்டர்கள், பேசாமல் வீறாப்போடு முதுகுகளை நிமிர்த்தினார்கள். சிலர் ஏனோதானோ என்று பார்த்தார்கள். பலர் நான் சீக்கிரமாகப் பேசி விட வேண்டும் என்பது மாதிரி கடிகாரத்தைப் பார்த்தார்கள். மைக் அருகே வந்த நான் இப்படி வாழ்த்தினேன்.

“தந்தை பெரியாருக்குப் பிறகு, தமிழகத்தில் முழுமையான தமிழன் இன்னும் பிறக்கவில்லை. தோழர் வலம்புரி ஜானின் மகளும், மருமகனும் ஒரு தமிழ்க் குழந்தையைப் பெற்றுக் கொடுத்தால் நாடே நன்றி தெரிவிக்கும்.”

ஒரு நிமிடத்தில் பேசி முடித்து விட்டு, நான் மேடையை விட்டு இறங்கினேன். கலைவாணர் அரங்கில் கலைஞரைக் காணச்