பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பிரியமுள்ள சிநேகிதனுக்கு of 39

மலையின் உயரமும் அகலமும் கடல் ஆழத் தில் எம்மட்டோ? அப்பத்தான் குளித்தமாதிரி. ஒரு freshness அவளிடம் திகழ்ந்தது.

The Queen Bee.

உட்கா ருங்கள், திவாகர், எந்நேரம் நிற்பீர்கள்? {`offee? Tea?”

அவள் சமையலறைக்குப் போனாள். உன்னைப் பார்த் தேன், நீ, நான் , அனு இனி ராப்பூரா தனி இப்படி உன் னோடு இருக்கப் பிடிக்கவில்லை. எந்த சங்கட சமயத்தையும் சந்திப்பதில் மனிதனுக்கு விருப்பம் கிடையாது. அடிப்படை வேறென்ன, பயம்தான். ஆனால் இவளைத் தனியாக விட்டும் போக முடியாது:

கைக்கு ஆவி பறக்கும் கோப்பையுடன் அனு வந்தாள். அவளுடைய ப்ரசன்னமே எனக்கு மாருதம் வீசினாற்போல் ஒரு தென்பாய் இருந்தது, கப் என் கையில் மாறுகையில் கவனித்தேன் நகக் கணுக்களில் என்ன ஆரோக்கியமான ரோஜாத் திட்டு: சுண்டு விரலிலும், அடுத்ததிலும் ஒரு செப்பு மோதிரம், இரண்டு கிராம் பொன் தேறாது. ஒரு நெளி. நெளியில் பதித்த கற்கள் கண்ணாடியென்று காணக் கண்ணாடி வேண்டாம். கட்டை விரலில் சுழி ரேகை அடுக்கில் தனித்தனியாக எண்ணிவிடலாம்.

அந்த சாட்டின் புடவை அவள் நடமாட்டத்திற்கு ஒரு புனிதத்தனத்தைத் தந்தது. கூந்தல் முடிச்சில் சொருகித் தொங்கும் ஜாதிமல்லிச் சரத்தினின்று, திடீர் திடீர் கம்'. இதுபோன்ற நுணுக்கங்களைக் கவனிக்க, தரிசிக்க இது தான் சமயமா? ஆனால் அது என் இஷ்டமில்லையே! ஆனால் அவை இப்பத்தானே எனக்குத் தென்படுகின்றன: அதுவே ஒரு விபரீதம்தான். நேரத்தின் ப்ருகடை முறுக்கேறி யிருந்தது. பின்! இன்னமும் ஏறப்போகிறது. உள் பீதி யினால்தான் அவளுக்கு இந்தத் தனி ஒளி:

பி.-9