பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏盛台 வா. ச. ராமாமிருதம்

காலையில் பூக்கும் பூக்கள்

மாலையில் பூக்கும் பூக்கள் சில அந்தியில், இரவில் சில

சில நடு நிசியில் இங்கே நட்டதில் குறைச்சலில்லை. தண்ணீர் விட்டதில் குறைச்சவில்லை. ஆனால் இந்த மண்ணுக்கு இவ்வளவு தான்; நீ புழுங்கினாலும், ஆறினாலும், தேறினாலும் மணக்கும் பூக்கள் எல்லாம் மாற்றான் தோட்டத்து மலர்கள்.

அம்மாவின் விரல்கள் அற்புதமானவை, நீண்டு, மெலிந்து, துணி கூம்பி, வீணையின் ஸ்வரக் கட்டுக்களை அவை நெருடுகையில், மேல்பாய்கையில், பதுங்குகையில், ஒடு கையில், தேடுகையில், தயங்குகையில், நாதங்கள் புறப்பட்டு அவள் விரல்களினிடையே ஒளிந்து விளையாடுவதைக் கவ னித்துக்கொண்டேயிருப்பேன். அலுக்காது. அப்போ சங்கி தத்தைப்பற்றி எனக்கென்ன தெரியும்? இப்பத்தான் என்ன தெரியும்? ஓ, விடுங்கள். உனக்கு ஆசையில்லை. ஆசை யில்லாதவளுக்குச் சொல்லிக் கொடுக்கமாட்டேன்’ என்று அம்மா தீர்த்துச் சொல்லிவிட்டாள்.

ஒ, நான் சொல்லவில்லையோ, அம்மா வைணிகை என்று அம்மா தன் வீணையைத் தன்னோடு கொண்டு வந்தாள். அந்தக் குடும்பமே ஸங்கீதப் பரம்பரை அம்மா வின் வீணை அவளுடைய முப்பாட்டனார் வாசித்ததாம். நேரம் கிடைத்தபோதெல்லாம் அம்மா அத்தோடுதான் இருப்பாள். அம்மாவின் வித்வத்தை எடைபோட இந்த வீட்டில் யாருக்கும் யோக்பதை கிடையாது.

அம்மாவின் சாதகத்தில் எனக்கு ஆலாபனை, பாட்டு, லாஹித்யம்-தனியாகத் தெரியவில்லை. நாதரீதியில் அவளுக்கும் வீணைக்கும் இடையே ஏதோ சம்பாஷணை, சிந்தனைப் பெருக்கு இல்லை வீணைமூலம் திரித்தாவுடன் பேச்சு? இதெல்லாம் என் எண்ணம். அசட்டு எண்ணம்.