பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷莹& லா, ச. ராமாமிருதம்

தம்பி விஷமக் கொடுக்குத்தான். ஆனால் இன்னும் படுக்கையைவிட்டு எழவேயில்லையே! நேற்று எல்லாரும் படுக்கப் போகும்போது வீணை சரியாத்தானேயிருந்தது? நடு இரவில் எழுத்து தள்ளிவிட்டு வந்து படுத்துக்கொண் டானா? அசட்டுப்பிசட்டுத் தனமாய் எண்ணுவதற்கும் ஒரு எல்லை கிடையாதா?

அப்பா அறையைவிட்டு எழுந்துவந்து எங்கள் தோற்றத் தைக் கண்டு நேரே அம்மாவிடம் போய் அவளை அணைத் துக்கொண்டார். அவர் கண்கள் பெருகின. அம்மாவையும் அப்பாவையும் அப்படிப் பார்த்தது அதுவே முதல் தடவை. கடைசித் தடவையும் அதுதான்.

அன்று அந்த அலறலுக்குப் பிறகு ஆத்திரமாவோ அழுகையாவோ அம்மாவிடமிருந்து அந்த மாதிரி சத்தம் வரவில்லை.

ஆனால் வீணையோடு அவளும் சேர்ந்து உள் முதிர்ந்து போய்விட்டாள் என்று எங்களுக்குத் தெரிந்தது. ஆனால் வெளிக் காண்பித்துக்கொள்ளமாட்டாள். Siender and. proad. சில சமயங்களில், யோசனையில் பூமியை விரல் துணிகளால் தட்டிக்கொண்டு. வீணை ஞாபகம். விரல்களின் வழி அவளுக்கு மட்டும் கேட்ட நாதம் கசிந்ததோ? நாத சிந்தாமணி என்று ஒரு ராகமிருக்கிறதாமே!

எதிலுமே அப்புறம் அம்மாவுக்கு முனைப்பு இல்லை. ஒரு காட்சி நினைவில் பிதுங்குகிறது. இதோ இந்த நிமிஷம்

சொல்லும்படியாக

இது மாதிரிதான் அந்தி முன் குறிகள் ஏதுமில்லாமல் திடீரென மழை கொட்டோ கொட்டெனக் கொட்டிற்று. கூடத்து ஜன்னலில் பதித்த கண்ணாடித் தகடுகளின்மேல் தாரைகள் வழிந்தன. வழிந்துகொண்டேயிருந்தன. அம்மா படுக்கையினின்து எழுந்து கைகளை விரித்தபடி அங்கு