பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலப்பாகம் 23 I

தரையினின்று அள்ளி அள்ளி மண்ணையும், சாம்பலை யும் பூசிக்கொண்டான். அவன் நடனம் கூடச் செய்யவில்லை. இடுப்பில் கைகளை ஊன்றி, கால்களைப் பரப்பிக் கொண்டு

இப்போது ஊழிக்கூத்தன் நான்! நெற்றிக்கண் திறந்தது.

அஷ்ட குலாசலங்கள் குலைந்தன. அஷ்டதிக் கஜங்கள் பிளிறிக்கொண்டு திசைமாறி ஓடின. குவலயம் கவிழ்ந்தது. ஆழாழி கரை புரண்டு கடல் பொங்கி பூமியை அதன் உயிர்களுடன் மூடிற்று. ஆங்காங்கே பூகம்பம் அலை அலை யாக உயிர்களை விழுங்கின.

கடலடியில் பனிமலைகள் வெடித்து எரி கக்கிற்று. இரு கைகளாலும் மார்பில் தட்டிக்கொண்டான்.

ஊழிக்கூத்தன் நான் ஊழிக்கூத்தன் நான்!” @ -சாவி