பக்கம்:என் ப்ரியமுள்ள சிநேகிதனுக்கு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுக்கல் *星

ேேதாத்தாவுக்கு நமஸ்தே சொல் கார்த்திக்:”

  • அவன் என்னை அப்பான்னே அழைக்கட்டும்.’’ லேசாகச் சினந்தார்.

பையன் லஜ்ஜையுடன் வந்து அவர் கையுள் தன் கையை வைத்தான். அவ்வளவுதான். எப்படியென்று தெரிய வில்லை. அவருக்கு உள்ளே மார்பு அகன்று விரிந்த மாதிரி...

இழுத்து அனைத்து, கன்னத்தோடு கன்னம் இருத்திக் கொண்டார். உடனே அவர் கழுத்தை அவன் கைகள் வளைத்துக்கொண்டன. அவருக்கு மூர்ச்சை போட்ட மாதிரி ஆகிவிட்டது. மெத்து மெத்து...

வா வா கார்த்திக், நேரமாச்சி, இன்னி குளிக்க வேணாம். ரிக்ஷா வந்துட்டுது. ட்ரஸ் மாட்டிக்க. அண்ம். ஜல்தி ஜல்தி-வா, வாரி விடிறேன். டி.பன் எடுத்துக் கிட்டியா? இன்னிக்கு அந்தத் தாத்தா வீட்டுக்குப் போவேணாம். நேரே இங்கே வந்திடு. இந்தத் தாத்திா வுக்குக் கம்பெனி கொடுக்கணுமில்லே! டாட்டா !”

அவரிடம் வந்தாள்,

  • அப்பா, உங்கள் சாப்பாட்டை மேஜையிலே மூடி வெச்சிருக்கேன். எப்பவுமே காலையிலே கெடுபிடிதான். சமையல் விவரமா முடியாது. சாயங்காலம் வந்தாலும் எப் படாப்ப வேலை முடிச்சி, தலை சாய்ப்போம்னு இருக்கு. ஞாயிற்றுக்கிழமைதான் கொஞ்சம் லெஷர். ஆனால் அன்னிக்கு வாஷிங் டே, வேலைக்காரி இங்கே பெரிய ப்ராப்ளம். மொஸ்ாய்க்கைத் துடைக்க மட்டும் முப்பத்தி அஞ்சு வேணும்ாம். தலையிலெழுத்தேன்னு கொடுக்கறோம் டி.வி. பக்கத்துல்ே பாலுக்குப் பாத்திரம் வெச்சிருக்கேன். மத்தியானம் சைக்கிள்லே வருவான். மணியடிப்பான், துங்கிடாதீங்க. போயிடுவான். வாசல் கதவை மூடியே வையுங்க. பகல்தானேன்னு பார்க்காதீங்க. தெரு வழியே பார்த்துக்கிட்டே போய் வேளை பார்த்து மாடி வழியா