பக்கம்:எப்படி உருப்படும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

12 புது முகங்கள் வேண்டும், வேண்டும் புதுமுகம் என் கிறார்கள். புதுமுகங்கள் என்று சில உருப்படிகளை அறி முகம் வேறு செய்கிறா ர்கள். அவள் அக்காள் அலங்கா என்று முழிக்கும் பதார்த்தங்கள்தான் புதிதாக வருகிறவர் களும் இவர்களும் விரைவிலேயே பெரியவர்களோடு போட்டி போடத்துணிகிறா ர்கள்-பருமனாக வளர்வதிலும் கண்டபடி திரிவதிலும்தான்! இவர்களிடம் அகப்பட்டுக்கொண்டு திணறும் சினிமாக் கலை எப்படி உருப்படும்.

இவ்விதம் கோளாறான அடிப்படைகளிலேயே உருவாக் கப்படும் படங்கள் வெற்றிப்பெறவேண்டும் என்பதற்காக குறுக்குவழி காண முயல்கிற சினிமா பிரம்மாக்கள் மட்ட ரகமான காட்சிகளை ஹாஸ்யத்தின் பெயரால் இணைக்கிறார் கள். இவர்கள் அகராதிப்படி ஹாஸ்யம் என்றால், அசட்டு ஆணை முரட்டுப் பெண் மிரட்டுவது, போட்டியாக ஒரு புருஷனை

பெண்டாட்டி அறைவது !

பித்துக்குளி தலைகாட்டி உதை வாங்கிக்கொண்டு ஓடுவது, திரும்பத் திரும்ப இதே பாதையில்தான் கடை ஹாஸ்யம் என்கிற கழுத்தறுப்பு .எல்லாப் படங் களிலும் ஒரே ரகம்தான். கண்களை உருட்டிப் பேந்தப் பேந்த விழிப்பது வாயை மணிப்பர்ஸ்போல் ஆக்கி இளிப்பது......அசடாக அலைவது......பேயாடுவது.........ஒப்பாரி வைப்பது...... இன்னோரன்ன பிற ஹாஸ்ய நடிப்பின் இலக்கணம் !