பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எரிநட்சத்திரம் * 16

காட்சி 1


இடம் : தலை நகர் -தில்லி

காலம் : இரவு10-மணி

உறுப்பினர் : நெடுமுடி, அம்ரிதா, குண்டர்கள்.

1984-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள். பாரதப் பிரதமர் உடலில் பாய்ந்த குண்டுகளின் வெடிச்சத்தம், அன்று இரவில் எதிரொலிக்கத் தொடங்கியது. வன்முறையாளரின் முரட்டுக்கரத்தில் தில்லயின் குரல்வளை சிக்கிக்கொண்டது. நெடுமுடி கைகளைப் பின்னால் கட்டியபடி கூடத்தில் அமைதியின்றி நடந்து கொண்டிருக்கிறான். திடீரென்று ஒரு பெண்ணின் முகம் பல கணியில் தெரிகிறது.

நெடுமுடி:

யாரது அங்கே?

பெண்:

அபலை!
வேட்டை நாய்களால்
துரத்தப்படும் மான்!
திறவுங்கள் கதவை!

(ஒடிக் கதவைத் திறக்கிறான் நெடுமுடி அவள் முயலாக உள்ளேபாய்கிறாள்)

கதவைத் தாழிடுங்கள்!
கொலைவெறிபிடித்த
குண்டர் கூட்டம்!
கிடைத்தால் என்னைக்
கிழிந்து விடுவார்கள்!

நெடுமுடி:

கழிப்பறையில் நுழைந்து
கதவை மூடிக்கொள் ஒடு!

(வெளியில் வெடிக்குரல்கள்! கதவை இடிக்கின்றனர்)