பக்கம்:எழுத்து, சி. சு. செல்லப்பா.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

——————————————————————————————வல்லிக்கண்ணன்

அகநோக்கு இதுவரை கண்டிராத அளவு விரிவும் ஆழமும் பெற்றது.உணர்வு உலகத்தில் ஆழத்துளாவி துருவிப் பார்த்தார்கள்.மென்மையானதும்,சிக்கலானதும் கூட்டுக்கலப்பானதும், திட்டமான எண்ணத்துக்கும் உருவாகாமல் பிரக்ஞை நிலையிலேயே இருக்கும் அக உளைச்சல்களை எல்லாம் சொல்லப் பார்த்தார்கள். கணக்கற்ற அணுக்களைப் போல் எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஒரே சமயத்தில் மனதுக்குள் பொழியும் மனப் பதிவுகளை, மாறுபடும், இனம் தெரியாத ஒரு கட்டுக்கடங்காத மனப்போக்கை வெளித் தெரிவிப்பது தங்கள் கடமை என்று கருதினார்கள். அதே சமயம் புறஉலகமும் அவர்களைப் பாதித்தது. புதிய விஞ்ஞானத் தகவல்கள் பிரபஞ்ச விசாரணையிலே புதுப் பார்வைகளை ஏற்றின. வாழ்க்கை ஒரு ஐக்யத் தன்மை வாய்ந்தது என்பதோடு தொடர்ந்து ஒடும் ஒரு தாரை,சென்றது. நிகழ்வதுடன் பிணைகிறது. நிகழ இருப்பதின் வெளிக்கோட்டை உருவாக்க ஒரு கணம் மறுகணம் என்றெல்லாம் இருந்தாலும் ஒன்றை அடுத்து ஒன்றாக இடையறாமல் தொடர் நிலையாக ஒடிக்கொண்டிருக்கும் கணப்பொழுதுகளால் ஆவது தான் வாழ்க்கை,ஒவ்வொரு நிகழ் கணப்பொழுது எல்லா காலத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கிறது, அத்தகைய கனப்பொழுதில் நின்று பார்க்கிற கவிதையின் பார்வையின் காலம் வெளி இரண்டும் பேதமற்றுப் போய் விடுகின்றன என்ற, காலம் வெளி பற்றிய கருத்துக்கள் பரவின.

ஆக, அகபுற உலக மாறுதல்களால் பாதிக்கப்பட்ட இந்த நூற்றாண்டு ஆரம்ப காலத்தவன் புதுக்கவியாக மலர்ந்தது மேல் நாட்டில் கவிதை உலகம் கண்ட அனுபவம். அது பூத்த பூக்கள் நிறைய.

இதற்குப் பின் , தமிழில் பாரதி செய்த முயற்சிகள் பற்றி குறிப்பிட்டுவிட்டு, புதுக் குரல் கவிஞர்கள் சிலரது சில படைப்புக்களை செல்லப்பா இம் முன்னுரையில் ஆராய்ந்திருக்கிறார்.

'1910-20களில் மேல் நாட்டு புதுக்கவிதைக்கு ஒரு உந்துதல் ஃபிராய்டீயம், மார்க்சீயம் இரண்டிலிருந்தும் மனோதத்துவ லோகாயத தத்துவ ரீதியாகவும் ஏற்பட்டது என்ற தகவலும் இம்முன்னுரையில் காணக்கிடக்கிறது.

247