பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சான்பிரான்சிஸ்கோ-லாஸ் ஏஞ்சலஸ் 24.5.85 357 யெல்லாம் கேட்டனர். அவர்தம் இளையமகளுக்குச் சற்றே காய்ச்சலும் இருமலும் இருந்தன. அவர்களே டாக்டராயினும் வேறொரு டாக்டீரைக் கேட்டு மருந்து கொடுத்தனர். அது தான் முறையும்கூட. பின் நாளை மறுநாள் இரு விடுமுறை நாட்களிலும் எங்கெங்கே செல்ல வேண்டும் என அவர்கள் தீட்டிய திட்டத்தினைச் சொன்னார்கள். திரு. ஐயர் அவர் கள் ஞாயிறு காலை வந்துவிடுவர். நெடுநேரம் பேசியிருந்து இரவு 10.30க்குப் படுக்கச் சென்றேன்.