பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

________________

10 தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. பரம்பரையும் பண்பாடும் வளமும் வலிவுமுள் ள தமிழ்மொழி, ஆட்சியிலும் நிர்வாகத்திலும், வாழ்வின் சகல முறைகளிலும் அரசு வீற்றிருக்க வேண்டுமென்று தணி யாத்தாகம் கொண்டு துடிக்கின்றனர். தமிழ் மக்கள் எல்லோரும் இந்த வேட்கையால் விழுங்கப்பட்டு நிற்கின்றனர். அதனால்தான், திரு - தமிழக மக்களும், காரை, பாண்டி மக்களும் சித்தூர் எல்லைப் புறத் தமிழனும் தாய்த் தமிழகத்துடன் ணைந்து தமிழ்மொழி ஆட் சியை நிலைநாட்டக் கோருகின்றனர். யில் உ ஐக்ய தமிழகம்-மக்கள் கோரிக்கை த கோரிக்கை, ஒரு சில படித்த அறிவாளிகளின் கற்பனை தித்ததல்ல, தமிழ்ப் பித்தர்களின் ஆவேசக் கூச்சலுமல்ல. அர சியல் சூதாட்டக்காரர்களின் வாண வேடிக்கையுமல்ல. நாட்டைப் பிளவுபடுத்தும் நாசகாரிகளின் சதித் திட்டமுமல்ல. தமிழ் மக்களி டம் பன்னெடுங் காலமாக உருவாகி, இன்று 3 கோடி தமிழர்களின் தன்னுணர்வில் உறுதிப்பட்டு நிற்கும் கோரிக்கை து. எப்படி? சங்ககாலத்தில், தமிழகம், தென்பாண்டிநாடு, வேணாடு, நாடு, குட்டநாடு, பூழிநாடு, பாண்டிநாடு, புனல்நாடு,பன்றிநாடு, அருவாநாடு, மலாடு இவ்வாறு பற்பல நாடுகளாகப் பிரிந்துகிடந்தது என்று தெரிகிறது. அப்பாலும், சாதாரணமாக தமிழ்மக்கள் அறிந் திருப்பதுபோல், சேரநாடு, சோழநாடு, பாண்டிநாடு, கொங்குநாடு, தாண்டை நாடு என்று தமிழ்நாடு பிரிந்துகிடந்தது. மூவேந்தர் ஆண்ட நாடுகளிலும் ஒவ்வொரு நாடும் பல உபநாடுகளாகப் பிரிந்து கிடந்தது என்றும் அறிகிறோம். பண்டு மன்னர்கள் மாறிமாறி நாடு களைப் பிடித்து அடக்கி ஆண்டார்கள். இலக்கண நூல் வல்லார் களும், கவிஞர்களும் தங்கள் தங்கள் அறிவுத் தரத்திற்கும் அனுபவத் இறத்திற்கும் தக்கடி நாடுகளை வரையறுத்துக் கூறினர்; பாடினர். தமிழ்மக்கள் வாழும் நிலப்பரப்பு முழுதும் ஒரே நாடாக என்றும் விளங்கியதுமில்லை; ஒருகுடை நிழலில் என்றும் இருந்ததுமில்லை. கடைசியாக பிரிட்டிஷார் இங்குவந்து நிலைமை தலைகீழ் மாறுதல் அடைய ஆரம்பித்தது. ரயில்வே போக்குவரத்து ஏற்பட்டது. புதிய யந்திரத் தொழில் கள் தோன்றத் தொடங்கின. நாஞ்சில் நாடும் தாண்டைநாடும் அண்டை அயல் ஊர்கள் மாதிரி உலக விவகாரத்தில் ஈடுபட வாய்ப் புக் கிடைத்தது. நாகப்பட்டணத்தானும் பொள்ளாச்சிக்காரனும் ஒரே வாணிபத்தில், ஒரே தொழிலில் ஈடுபட சந்தர்ப்பமும் தேவை யும் பிறந்தன. சாதி, மதத் தடைகள் தகர்ந்தன. எந்த மன்னர் மரபு அஸ்தமித்தாலும், எந்த சாம்ராஜ்யம் உடைந்து சுக்குநூறானாலும் அன்றிருந்த மேனி அழியாது, காலகாலமாக ஆட்சி செலுத்திவந்த