பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

________________

14 புக்கு இடங்கொடாத, காங்கிரஸ் கும் ஒற்றுமை, போலி ஒற்றுமையே. லைமை உபதேசிக் இவ்வித ஒற்றுமை, மக்களின் இதயத் துடிப்புக்கு நேர் விதோத மாகும். ஏன்? இன்று, இந்திய யூனியனை, ஒரே மொழி பேசி, கலை, கலாச்சார, பண்பாடுகளுடைய ஒரே இன மக்கள் வாழுகிற நாடென்று யாரும் சொல்லமாட்டார்கள். இந்திய யூனியனிலுள்ள மக்களிடையில் பல பொதுவான கலை, கலாச்சார அம்சங்கள் இருந்த போதிலும், வங்காளி மக்களுக்கு பிரத்தியேகமான குணாம்சங்களுண்டு, அதுபோல் பாஞ்சாலத்தார் நடையுடைபாவனைகள் குஜராத்தியரைப் போன்றதல்ல. அதுமாதிரி, தமிழர், மலையாளிகள், ஆந்திரர், கன்னடியர், ஆகிய மொழிவழி மக்களிடையிலும் தனித்தனிக் குண வேறுபாடுகள் உண்டு. தமக்கே சிறப்பாக பல குணாம்சங்கள் வாய்க் கப்பெற்றுள்ள தமிழ் மக்கள், தமிழ்த்தாயகம் ஒருருவாகி, பொலிவும் வலிவும்பெறும் நன்னாளை எதிர்பார்க்கின்றனர். சென்னை ராஜ்யக் தமிழராயினும், திரு கொச்சி ராஜ்யத் தமிழராயினும், பிரஞ்சிந்தியத் தமிழராயினும், இன்று,தமிழர் அனைவரும் ஒன்றுபட்டு ஒரே ஆட் யின்கீழ் வாழவிரும்புகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு மக்களும் அவ ரவர் மொழி ராஜ்யத்தை விரும்புகின்றனர். LD மொழிவழி ராஜ்யங்கள் இஷ்டபூர்வமாக இணைவதில் மலரும் இந்திய ஒற்றுமைதான் வலிமை மிக்கதும் ஒருவருக்கொருவர் குரோத மற்றதும் நிரந்தரமானதுமான ஒற்றுமையாக இருக்கமுடியுமே யொழிய இன்றைய ராஜ்யங்களின் அமைப்பு முறையால் ஏற்படும் போலி ஒற்றுமையாலல்ல. எனினும் மறுக்க முடியாத, மறுக்கக் கூடாத இந்த சரித்திர உண்மையை, பிரத்தியட்ச நிலைமையை ஏற்று மறுக்கிறது நேரு ஆட்சி. அதன் பலனாக, அது தோல்விமேல் தோல்வி அடைந்து வ ருகிறது. "திராவிட நாடு'-ஒரு கற்பனை கோஷம் ஐக்ய கோளம், ஐக்ய தமிழகம், விசால ஆந்திரம், சம்யுக்த கன் னடம், ஐக்ய மகாராஷ்டிரம், மகாகூர்ஜரம், ஐக்ய பாஞ்சாலம் என்று குமரி முதல் இமயம் வரை மொழி ராஜ்யக் கிளர்ச்சி நடப்பதே இன் றைய யதார்த்த நிலைமை. இந்த கிளர்ச்சி எதைக் காட்டுகிறது? இந் தியாவில் மொழிவழியில் புதிதாக உ வாகியுள்ள தேசீய இனங்கள் தறிக்கிடக்கும் தங்கள் தாயகங்களை முறையாகச் சீரமைத்துக் கொள்ளும்பொருட்டு, சிதறுண்ட நிலையே சீரான நிலை எனக்கூறு வோரை எதிர்த்துப் போராடுகின்றன என்பதையே காட்டுகிறது. இந்த மொழி ராஜ்ய ஜனநாயகக் கிளர்ச்சியில், தென்னிந்தியாவிலும் சரி, வட இந்தியாவிலும் சரி, எங்கும் "திராவிட - ஆரிய இன'ப் பேச்சு எழுந்ததில்லை; ழவில்லை.