பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

ஐக்கிய தமிழகம்


முன்னுரை


ன்று தமிழ் மக்களின் இலட்சிய கீதமாக ஐக்கிய தமிழகம் உருவாகிவிட்டது. இன்றைய சென்னை ராஜ்யத்தின் பகுதி தமிழ் மக்களும், பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்களும், மென்மேலும் இந்த கோஷத்தின் கீழ் உருண்டு திரண்டு வருகின்றனர். மொத்தத்தில் தமிழ் இனத்தின் இந்தப் புனித லட்சியத்தை, எதிர்ப்பவர்கள் இல்லை என்று சொல்லிவிடலாம்.

திரு - தமிழகத்தில் விழிப்புற்ற சராசரி தமிழனின் ஒரு தனி கோஷமாக, ஐக்கிய தமிழக கோஷம் திகழ்கிறது. பிரஞ்சிந்திய இணைப்புக் கிளர்ச்சியில், பாண்டிச்சேரி, காரைக்கால் தமிழர்களின் உந்து சக்தியாக ஐக்கிய தமிழக கோஷமே உறுத்தெழுந்து நிற்கிறது.

தமிழர்களின் யதார்த்தச் சூழ்நிலையையும், அரசியல் திசை வழியையும், இதய கீதத்தையும் கருத்தூன்றிக் கணக்கிலெடுத்து, அண்மையில் கோவையில் நடந்த தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு, ஐக்கிய தமிழக அமைப்புப் பற்றிய முக்கியமான ஓர் தீர்மானம் நிறைவேற்றி யிருக்கிறது. 3 கோடி தமிழ் மக்களின் இந்த இலட்சிய கோஷம், தமிழகத்தின் மூலை முடுக்கு, இண்டு இடுக்குகளெல்லாம் ஒலியும் எதிரொலியும் முழங்குமாறு செய்ய உறுதி பூண்டிருக்கிறது.

இன்றைய தமிழகத்தின் நிலைமை என்ன? மொழிவழி ராஜ்யக் கிளர்ச்சியின் முக்கியத்துவம் யாது? “ஐக்கிய தமிழகம்” எப்படி உருவாகி இருக்கிறது? காங்கிரஸின் இந்திய ஐக்கியம், திராவிட இயக்கத்தின் ‘திராவிட நாடு’, தமிழ் மக்களின் அரசியல் பொது கோஷம்—ஆகியவை பற்றிய கம்யூனிஸ்டு கட்சியின் கண்ணோட்டத்தையும் கருத்துரையையும் இந்நூலில் சுருக்கவிளக்கமாகக் கொடுக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐக்கிய_தமிழகம்.pdf/5&oldid=1511462" இலிருந்து மீள்விக்கப்பட்டது