நெய்தல்
269
மேற்கோள்: இனி உள்ளப் புணர்ச்சியானன்றி இயற்கைப்புணர்ச்சி இடையீடு பட்டுழி, பின் தலைமகள் குறியிடம் கூறிய வழி, அதனைப் பாங்கற்கு உரைத்தல் என்று இச்செய்யுளைக் குறிப்பிட்டுக் காட்டுவர் இளம்பூரணர் - (தொல். களவு. 12).
"தான் வருந்திக் கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின, இவ்வாறு ஆற்றானாய் இங்ஙனம் கூறினான் என்று அஞ்சித், தோழி உணராமல், தலைவி தானே கூடிய பகுதிக்கு உதாரணம்" என்று காட்டிக் கூறுவர் நம்பியகப் பொருள் உரைகாரர் - (களவு. 11) காதலன் தலைவி மூதறிவுடைமை மொழிதல் என்றும் அவரே கூறுவர் - (களவு. 28).
175. நன்னுதல் அரிவையொடு வந்திசின்!
துறை: பாங்கற்கூட்டம் கூடி நீங்கும் தலைமகன், 'இனி வருமிடத்து, நின் தோழியோடும் வரவேண்டும். எனத் தலைமகட்குச் சொல்லியது.
[து. வி.: பாங்கனின் உதவியாலே தலைவியைக் கூடிய பின், தலைவியைப் பிரிகின்ற தலைவன், 'இனி நீயும் நின் தோழியின் துணையோடும் வருக; தனியாக ஒருபோதும் வருதல் வேண்டா எனத் தலைவிக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]
எமக்கு நயந் தருளினை ஆயின், பணைத்தோள்
நன்னுதல் அரிவையொடு மென்மெல இயலி
வந்திசின் வாழியோ, மடந்தை
தெளிவுரை : மடந்தையே. நீ வாழ்வாயாக! தொண்டி நகரேபோலகின்ற நின் பணபுகள் பலவற்றையும் கொண்டனையாய், எம்பாலும் விருப்பங்கொண்டு வந்து, எமக்கும் அருளிச் செய்தனை! ஆயின், இனி, பணைத்த தோள்களையும் நறியநுதலையும் கொண்டாளான நின் தோழியோடும் கூடியவாறே மெல்ல மெல்ல நடந்தனையாகி, இவ்விடத்துக்கு வருவாயாக! தனியே வருதல் வேண்டா!
கருத்து: 'நின் தோழியின் காவல் துணையோடு எச்சரிக்கையோடே வருக' என்றதாம்.