பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆடுகளத்தில் 30 அடிதுார இடைவெளியில் இரண்டு நேர்க்கோடுகள் போட்டு, ஒவ்வொரு குழுவையும் ஒவ்வொரு கோட்டின் மேல், நிறுத்த வேண்டும். ஒருவரை ஒருவர் பார்ப்பதுபோல, இக்குழுவினரும் எதிரேதிராக நிற்க வேண்டும். அவர்களுக்கு நடுவே மையத்தில் அதாவது 15 அடி தூரத்தில் 6 சதுர அடியில் ஒரு சதுரக் கட்டம் போட வேண்டும். அதுதான் கோட்டை என்று ஆட்டக்காரர்களிடம் கூற வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலித்தவுடன், இரு குழுக் களைச் சேர்ந்த ஆட்டக்காரர்கள் எல்லோரும் கோட்டையை நோக்கிப் பாய்ந்தோட வேண்டும். அவர்களின்நோக்கமானது கோட்டையைக் கைப்பற்றுவது தானே!

அதற்காக, தங்கள் குழுவினர் எல்லோரும் கோட்டைக்குள் இருந்தால்தானே கோட்டையைக் கைப்பற்ற முடியும். அதற்காக எதிர்க்குழுவினர் கோட்டைக்குள் இருந்து தள்ளியும், நுழைபவர்களைத் தடுத்தும் நடத்துகின்ற போராட்டம் 2 நிமிடம்தான் நீடிக்க வேண்டும்.

உடனே விசில் மூலம் போராட்டத்தை நிறுத்திவிட வேண்டும். போராட்டம் நின்ற பிறகு, எந்தக் குழுவினர் அதிகமாக கோட்டைக்குள் நிற்கிறார்களோ, அக் குழுவினரே வென்றவர்களாவார்கள். -

71. திருடர்களும் சிப்பாய்களும் (Robbers and soldiers)

ஆட்ட அமைப்பு:இருக்கின்ற ஆட்டக்காரர்களை சம

எண்ணிக்கையுள்ள இரு குழுவினர்களாகப் பிரிக்க வேண்டும். 100 அடி இடைவெளி இருப்பதுபோல்