பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


ஆடும் முறை: ஆசிரியரின் விசில் ஒலிக்குப் பிற்கு, ஒவ்வொரு குழுவிலும் முதலில் நிற்கின்ற இரட்டையர் தங்களுக்கென்று தரப்பட்ட ஆட்டக்காரரைத் தங்கள் கோர்த்திருக்கின்ற கைகளில் உட்காரவைத்துத் தூக்கிக் கொண்டு எதிரே 20அடி துரத்தில் குறிக்கப்பட்டிருக்கும் ஓடி முடிக்கும் எல்லைக் கோட்டை நோக்கி ஓட வேண்டும்.

எல்லைக் கோட்டை அடைந்ததும், தூக்கிச் சென்ற இரட்டையர்கள், எல்லைக்கோட்டிலேயே தங்கிக்கொள்ள, தூக்கிச் சென்ற (பையன்) ஆட்டக்காரர் மட்டும் திரும்பி ஓடி வந்து ஓடத் தொடங்கும் கோட்டருகில் நிற்கும் இரண்டாவது இரட்டையரிடம் வர, அவர்கள் முன் இரட்டையர் போல இவரைத் தூக்கிக் கொண்டு எல்லைக் கோட்டுக்குச் சென்று இறக்கிவிட்டு விட்டு அங்கே நின்று கொள்ள, அந்தத் தனி ஆட்டக்காரர் மீண்டும் இங்கு வர, இவ்வாறு, இரட்டையர்கள் தனி ஆட்டக்காரரைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார்கள்.

குழுவின் கடைசி இரட்டையர் இவ்வாறு தூக்கிய வண்ணம் ஓடிவிட, அந்தத் தனி ஆட்டக்காரர் மீண்டும் ஓடத் தொடங்கிய கோட்டினை வந்து அடைந்துவிட வேண்டும். யார் முதலில் வந்தடைகிறாரோ, அவரது குழுவே வென்றதாகும்.

குறிப்பு: ஒவ்வொரு குழுவிற்கும் ஒவ்வொரு தனி ஆட்டக்காரர் உண்டு. அவர்கள் முதலில் எல்லைக் கோட்டில் நின்று, விசில் ஒலிக்குப் பிறகு தன் குழுவை நோக்கி ஓடி, அங்கிருந்து முதல் இரட்டையரால் தூக்கப்பட்டு செல்வதாகவும் ஆடலாம்.