பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா 137

96. நள்ளிரவு (Midnight)

ஆட்ட அமைப்பு: ஒடத் தொடங்கும் கோடு ஒன்றைப் போட்டபிறகு, அதிலிருந்து 30 அடி தூரத்திற் கப்பால், 5 அடி விட்டமுள்ள வட்டம் ஒன்றையும் போட்டு வைக்க வேண்டும்.

எல்லா ஆட்டக்காரர்களும் ஒடத் தொடங்கும் கோட்டில் நிற்கும்போது, ஒருவர்(it) மட்டும் வட்டத்துள் நின்று கொண்டிருக்க வேண்டும். - -

ஆடும் முறை; ஆசிரியரின் விசில் ஒலி அனுமதிக்குப் பிறகு, கோட்டில் நின்று கொண்டிருந்த ஆட்டக்காரர்கள் வட்டத்தை நோக்கிச் சென்று, அந்த வட்டத்தைச் சுற்றி நின்று கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் இப்பொழுது நேரம் என்ன? என்ற கேள்வியைக் கேட்கும்போது, வட்டத்துள் இருப்பவர்