பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

29


இரண்டு குழுவில் உள்ளவர்களில் ஒருவருக்கொருவர் யார் யார் பாங்கர் (Partner) என்று முன்கூட்டியே சொல்லி வைத்துவிட வேண்டும். - உள் வட்டத்தைச் சுற்றி நிற்பவர்கள் இடதுபுறமாக (Facing Left) வளைந்து ஓடுமாறும், வெளி வட்டத்தைச் சுற்றி நிற்பவர்கள் வலதுபுறமாக (Facing Right) வளைந்து ஒடுமாறும் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆள் இல்லாமல் தனியே இருக்கும் ஒருவர் (it) ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன் உள்வட்டத்தின் மையத்தில் நின்று கொண்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு உள் வட்டத்தில் நிற்பவர்கள் இடப்புறமாக வளைந்தும், வெளி வட்டத்தில் நிற்பவர்கள் வலப்புறமாக வளைந்தும் ஒடிக் கொண்டிருக்க வேண்டும். நன்றாக வேகமாக ஒடிக் கொண்டிருக்கையில், விசில் ஒலிக்க வேண்டும். (இசையை இசைக்கச் செய்து திடீரென்றும் நிறுத்தலாம்)