பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

43


ஆடும் முறையெல்லாம், 20-வது ஆட்டத்தையே பின்பற்ற வேண்டியதுதான்.

குறிப்பு: மேலே கூறிய 21 சிறு விளையாட்டுக்கள் அனைத்தும் ஆறாம் வகுப்பிற்கு உரியனவாகும்.


22. நிழலாட்டம்

(Shadow Tag)

ஆட்ட அமைப்பு: வகுப்பில் உள்ள குழந்தைகள் அனைவரையும் சேர்த்து விளையாடலாம். மைதானம் முழுவதையும் ஆடுகளமாகப் பயன்படுத்திக் கொள்ள லாம்.

ஆட்டக்காரர்களில் ஒருவரை ‘விரட்டித் தொடுபவராக' (it) தேர்ந்தெடுத்துக் கொள்ளவும்.

ஆடும் முறை: நல்ல சூரிய வெளிச்சம் உள்ள நேரத்தில் மட்டுமே இந்த ஆட்டத்தை ஆட முடியும். இது விரட்டித் தொடும் (Tag) ஆட்டங்களிலிருந்து சற்று மாறுபட்ட ஆட்டமாகும்.

விசில் ஒலிக்குப் பிறகு, மற்ற ஆட்டக்காரர்களை விரட்டித் தொடுபவர் விரட்டத் தொடங்க வேண்டும். இதிலே ஆட்டக்காரர்களைத் தொட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தப்பி ஓடுபவர்களின் நிழலைத்தான் விரட்டுபவர் மிதிக்க வேண்டும். அப்பொழுதுதான் நிழலுக்குரியவர் தொடப்பட்டவராவார். ஆகவே, யார் நிழல் மிதிக்கப் படுகிறதோ அவரே அடுத்த விரட்டுபவராக மாறுவார். ஆட்டம் இதுபோல் மீண்டும் தொடங்கும்.