பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


அவர் குதித்த இடத்தைக் குறித்துக் கொண்டு, அதே இடத்தில் அடுத்த ஆட்டக்காரரை நிற்க வைத்து அங்கிருந்து தாண்டிக் குதிக்கச் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு குழுவில் உள்ளவர்களும் தாண்டிக் குதித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

கடைசியில் எந்தக் குழு ஆட்டக்காரர்கள் அதிக தூரம்

தாண்டிக் குதித்திருக்கின்றார்களோ,அந்தக் குழுவினரே வெற்றி பெற்றவர்களாவார்கள்.

குறிப்பு: நின்றபடியே அதிக தூரம் தாண்டிக் குதிக்கின்ற ஆட்டமாக அமைந்திருப்பதால், ஓ டி வந்து தாண்டாமல் உற்சாகமாக நின்றவாறே தாண்டிக் குதித்து விளையாட வேண்டும்.

43. பின்னோடும் தொடரோட்டம்

(Backward Running Relay)

ஆட்ட அமைப்பு:ஆட்டக்காரர்களை நிற்க வைக்கும் முறை, முன் ஆட்டத்தினைப் போல்தான்.

ஒவ்வொரு குழுவும் ஓடத் தொடங்கும் கோட்டின் பின்னே வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நிற்க வேண்டும்.

அவர்களுக்கு முன்னே 50 அடி தூரத்தில் ஒரு எல்லைக்கோடு போடப்பட்டிருக்க வேண்டும்.

ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு குழுவினர் முதலில் நிற்கும் முன்னோட்டக்காரர் முன்புறமாக ஓடாமல் பின்புறம் திரும்பி நின்று பின்புறமாகவே ஓட வேண்டும்.