பக்கம்:ஓங்குக உலகம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிஞரும் ஆவர்

107


இடவில்லை. (முன்னாள் இரவு, செயலர் கேட்டுக்கொண்ட போதும் பார்த்துக்கொள்ளலாம் என ஒதுக்கியிருக்கிறார்.) அவர் எண்ணி எண்ணி ஓய்ந்தார். தான் செய்த முறையைத் தானே மாற்றுவது முறையாகுமா எனச் சிந்தித்தார். ஒன்று அதைவிடவேண்டும்; அல்லது உயிர் விடவேண்டும். அதை எப்படி விடுவது? சட்டமன்றம் நிறைவேற்றி, நாட்டுத்தலைவர் விழா ஆற்ற நாளை வருகிறார். எனவே அதற்குள் நாம் செல்லுதலே முறை என அவர் உள்ளம் எண்ணிற்று. எண்ண்யது முடிந்தது.

கொடுத்த வரத்தை இல்லை என்று சொல்லுவதைக் காட்டிலும் இறப்பதேமேல் என்று அன்று தசரதன் இறந்தான். அவர் மகன் பெயர்தாங்கிய, ஜானகியின் கணவனாகிய நம் புரட்சித்தலைவர் தாம் வகுத்த கொள்கையினை மீறுவதிலும் மறைவதே மேல் எனத் தன் வாழ்வைச் சுருக்கிக் கொண்டார். ஆம்! அன்று அவர் மறைவில் ஒரு பெருங் காவியம் எழுந்தது. இன்று “எம்.ஜி.ஆர்.” மறைவில் ஒரு நிலைத்த காவியம் எழும்! அவர் புகழ் வாழும்! அவர் பணிகள் வளரும்! அவர் தொட்ட பணியெல்லாம் துலங்கும்! வாழ்க எம்.ஜி.ஆரின். வற்றாத புகழ் நலம்!

— பிப்ரவரி, 1988
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/110&oldid=1135832" இலிருந்து மீள்விக்கப்பட்டது