பக்கம்:ஓங்குக உலகம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காகிதம்...சீனநாட்டின் பங்கு

141


கற்று நூல்களைப் பெறச் சீன நாடு சென்றனர். அவர் தம் நாடு திரும்பி வந்தபின் அச் சீன நாட்டு அச்சுக்கலை முறையினைத் தத்தம் நாட்டில் பயன்படுத்தினர் எனலாம்.

காகிதம் செய்யும் கலை தெற்கு நோக்கிச் சென்ற காலம் திட்டமாக வரையறுக்கப் பெறாவிடினும், அது மிகப் பழங்காலத்திலேயே சென்றிருக்க வேண்டும் என்பது தேற்றம். மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே இந்தோசீனாவில் உள்ள சிறந்த மூலப்பொருள்களால் செய்யப்பெற்ற காகிதம் சீன அரசவைக்கு அன்பளிப்பாக (திறையாக) அனுப்பப்பெற்றது. சீனர்களிடமிருந்தே இந்தோசீனா மக்கள் இக் கலைத் திறனைக் கற்றார்கள் எனக் கொள்ளலாம். இன்றும் இந்தோசீனாவில் காகிதம் செய்யப் பயன்படு முறை, ஆசியாவின் பிறநாடு முறைகளிலும் சீன நாட்டு முறையோடு பொருத்தியிருப்பதைக் காணலாம். பத்தாம் நூற்றாண்டிலிருந்தே கன்பூசியம், புத்தம், தாவ்நெறி சமய இலக்கியங்கள் மருத்துவநூல்கள் நாவல்கள் உள்ளிட்ட பல சீன இலக்கியங்களை, இந்தோசீனா அச்சிடுவகையில், ஏற்றுக் கொண்டுள்ளது. சீன மொழியிலும் சீனம், வைட்நாமிய மொழி ஆகிய இருமொழிக் கலப்பிலும் பல நூல்கள் பல நூற்றாண்டுகளாகவே மர அச்சு, தனி அச்சு, வண்ண அச்சு முதலியவற்றால் சீன நாட்டில் அச்சிடப்பெற்றன.

ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பே காகிதம் இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தப் பெற்றது. கி.பி. 671-694-ல் இந்தியாவிற்கு வந்த சீனத் துறவியாகிய ‘ஐ-சிங்’ (I-ching) என்பார் தம் சீன வடமொழி அகராதியில் காகிதத்துக்குரிய சீனச் சொல்லுக்குப் பொருளாக வட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/144&oldid=1127879" இலிருந்து மீள்விக்கப்பட்டது