பக்கம்:ஓங்குக உலகம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

ஓங்குக உலகம்


யும் தூய்மைப்படுத்தி, போகியன்றைக்குத் தேவையற்ற அனைத்தையும் நெருப்பிலிட்டுப் பொசுக்குவோம். அதே வேளையில் அவை தீயினில் தூசாவது போலவே, நம் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் நாளும் இதுவாகும் என அறிகிறோம்.

மார்கழி விடியலில் எழுந்து, தூயநன்னீரில் துதைந்து துதைந்து ஆடி, இறைவனை ஆடியும் பாடியும் போற்றுவது நம் மரபாகும். இதைப் ‘பாவை நோன்பு’ என்பர் மணிவாசகர். திருவெம்பாவையும் ஆண்டாள் திருப்பாவையும் மார்கழி முழுதும் விடியலில் பாடப் பெறுவன; பயன் தருவன.

பாவை நோன்பினைப் பற்றியும் அதன் பயனைப் பற்றியும் ஆண்டாள் காட்டுவதை மட்டும் இங்கே காட்ட நினைக்கிறேன். உலகில்-சிறப்பாகத் தமிழ் நாட்டில்-நடைபெறும் எல்லா விழாக்களும் நாடும் நாணிலமும் வாழக் கொண்டாடப் பெறுவனவேயாம். ‘பசியும், பிணியும் பகையும் நீங்கி, வசியும்வளனும் சுரப்பதற்கே விழாக்கள் என்பதை நம் பண்டைய இலக்கியங்கள் நன்கு விளக்குகின்றன. ஆண்டாளும் இந்த உண்மையினையே நமக்கு விளக்கி, வையம் வளம் பெறப் பாவை நோன்பினை மேற்கொள்ளப் பாவையரை அழைக்கின்றார்.

நோன்பு-விரதம் என்பன தன்னடக்கத்துக்கு அறிகுறி. சிலவற்றை நீக்க, தூய்மையாக-உள்ளும் புறமும் மாசற்றதாக அமையப் பயன்படுவன. இதை ஆண்டாள்,

‘வையத்து வாழ்வீர்கள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/173&oldid=1135848" இலிருந்து மீள்விக்கப்பட்டது