பக்கம்:ஓங்குக உலகம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீதையின் இறுதிப் பிரிவு

173


நுனி முதலியவற்றை எண்ணி நீர் உகுப்பதைக் காண்கின்றோம். எனவே உயிரினத்தின் இயல்பு ஒன்றி வாழ்தலேயாம்.

இவ் வொன்றிய வாழ்வின் உச்சியில் முகிழ்ப்பதே காதல் வாழ்க்கை. காதல் வாழ்வு எனும்போது அது ஒரு பிறவியில் மட்டும் தோன்றி மறைவதன்று என்பதும் வழிவழியாகப் பிறவிகள் தோறும் பற்றி வருவதென்பதும் ஆய்ந்தோர் கண்ட முடிவு. பழங்காலச் சங்கப்புலவர் முதல் நேற்றைய பாரதி வரையில் இந்த உண்மையைப் பாடியுள்ளார்கள். எனவே காதல் பிரிவு ஆற்றமுடியாத ஒன்றாகும்.

வழிவழியாகப் பிறவிதோறும் வரும் இக்காதல் பிரிவினுக்கு இடையிடையே பல இடையூறுகள் வருவதும் மரிபு. இக்காதல், கடவுளைப் பற்றியதாக அமையும் போது அவ்விடையூறுகள் தகர்த்தெறியப் பெறுகின்றன. அல்லாத நிலையில் அவை பழிக்கப் பெறுகின்றன. சுந்தரர் இறைவனிடம் நீங்காத காதல் கொண்டவர். எனினும் இடையில் தையலார் மையலில் தாழ்ந்த காரணத்தால் இருவரை இனிய காதலியராக ஏற்று வாழ்ந்தார். எனினும் அவர் உள்ளம் ‘எத்தனை நாள் பிரிந்திருப்பேன் என்னாரூர் இறைவனையே’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தது. அவர் உள்ளம் இருவேறு காதல் நிலைகளுக்கு இடைப்பட்டிருந்தபோதிலும் வழிவழியாக ஒன்றிய உயர்ந்த காதலே இறுதியில் வெற்றி பெற்றதெனக் காண்கின்றோம்.

‘வண்டல் பயில்வன வெல்லாம் வளர்மதியம் புனைந்த சடை அண்டர்பிரான் திருவார்த்தை’யாகவே கொண்டு வாழ்ந்தவர் காரைக்காலம்மையார். அவருடைய காதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/176&oldid=1128015" இலிருந்து மீள்விக்கப்பட்டது