பக்கம்:ஓங்குக உலகம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சீதையின் இறுதிப் பிரிவு

177


நிலையிலேயே சீதையைக் காட்டுகிறார். இறுதியில் இராமனோடு சேர்ந்து மணிமுடி சூட்டி மகிழ்கின்றார். இந்த நிலையிலே கம்பர் தம் கவிதையை முடித்தாலும் இராமாயணம் இதனோடு முடிவதில்லை. தொடர்ந்து சென்று இராமன் சீதை இருவரின் தெய்வக் காதலைப் பொய்ம்மையாக்குகின்றது, இராவணனுடன் இருந்த சீதையைப்பற்றி யாரோ பழிக்க, அது கேட்ட இராமன் அவளை நிறைமாதக் கர்ப்பிணியாயிருக்கும் போது காட்டுக்கனுப்பினான்-அங்கே மக்கள் பிறந்து வளர, பிறகு ஒரு காலத்தில் அவளைக் காண நேரும் நிலையில் தவற்றினை உணர்கிறான் இராமன். ஆயினும் சீதையின் தெய்வக் கற்பு தேய்கின்றது. மறுபடி இராமனோடு செல்ல மறுக்கிறது. பிறந்த மண்ணையே புகலிடமாகக் கொண்டு மறைகிறாள் சீதை.

இராமாயணத்தின் இப்பிற்பகுதி யார் எதற்காக எப்போது எழுதினார்கள் என்று எண்ணும்போது நமக்கு அதிர்ச்சியும் குழப்பமுமே உண்டாகின்றன. கம்பரது ‘தெய்வநெறி’ எங்கு போயிற்று என எண்ணவேண்டியுள்ளது! இராமனும் தேவனே-திருமாலே என்று உணர்கின்றபோது நமது உள்ளத்தின் வேதனை இன்னும் அதிகமாகின்றது. சீதை இராமனைப் பிரிந்திருந்த பிரிவினைக் காட்டிலும் இந்தப் பிரிவே உண்மையில் வேதனை தருவது.

பிரிவால் வாடுவது இயற்கை எனக் கண்டோம், ஆனால் இந்தப் பிரிவில் இராமன் சுகம் காண்கின்றான். ஏன்? விளக்கம் கூறமுடியுமா? எத்தனைதான் வேறு பொருந்தாத சமாதானங்கள் இதற்குக் கூறினாலும் மனித உள்ளம் ஏற்குமா? பிணைந்த மணவாழ்வினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/180&oldid=1128022" இலிருந்து மீள்விக்கப்பட்டது