பக்கம்:ஓங்குக உலகம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஊழ்வினையும் ஆள்வினையும்

183


அழிவோடு உலகில் உயிரினமே அழிவுறுமோ என்று அஞ்சவேண்டியுள்ளது.

கம்பர் இவ்வாறு இரணியன் வாழ்வினை வீடணன் வாக்கால் இராவணன் முன்னிறுத்தி, என்றென்றும் வாழும் மக்கள் இனத்துக்கு நல்ல அறிவு காட்டி, நாடும் நானிலமும் சிறந்துவாழ வழி காட்டியுள்ளார். இந்த இருபாடல்களின் அடிகளையும் பிறபாடல்களையும் தனித் தனியாக எண்ணின் பலப் பல வாழ்வியல் கருத்துக்களைக் காணஇயலும். அவற்றைக் கண்டு மகிழுங்கள் என்ற வேண்கோடுளோடு நான் அமைகின்றேன்.

வால்மீகி காட்டாத இரணியனை இராவணனுக்குக் காட்டுவதன் மூலம் நமக்கு வழிகாட்டிய கம்பருக்கு இன்றைய ‘உலகம்’ தன் கொடுமைகளை விட்டு, இராவணத் தன்மையினை விட்டு-இரணியத் தன்மையினைவிட்டு-‘நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை என்ற நல்ல உளத்தொடு நடந்து நன்றி காட்டக் கடமைப்பட்டுள்ளது. அத்தகைய அறநெறிக்கு உலகை ஆற்றுப்படுத்த முயல்வோமாக.



25. ஊழ்வினையும் ஆள்வினையும்

ள்ளுவர் வையம் வாழ, வழிவகுத்தவர். உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் தம்முள் கலந்து வேறு பாடற்று ஒன்றிய வாழ்வில் திளைக்க வேண்டும் என்பதே அவருடைய ஆசை. அந்த அடிப்படையில் மறம் கடிந்து அறம் ஓம்பும் வாழ்வுக்கு உரிய ஆக்க நெறிகள் பலவற்றை வகுக்கின்றார் அவர். எடுத்துக்காட்ட விரும்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஓங்குக_உலகம்.pdf/186&oldid=1135854" இலிருந்து மீள்விக்கப்பட்டது